புதன், 7 நவம்பர், 2012

'...............லாம்..... தலாம்......எழுதலாம்..........ப்ளாக் எழுதலாம்.......'


‘டொக்.... டொக்....’

‘யாரது?’

‘நாங்கள் Worldpress.com இலிருந்து வந்திருக்கிறோம். இங்கு ரஞ்ஜனி 
நாராயணன் என்பது....?’

‘நான்தான், நான்தான்...உள்ளே வாருங்கள்...!’

‘நீங்களா...?’

‘நானேதான்! ஆதார் கார்ட் காட்டட்டுமா?’ (எனக்கு ஆதார் கார்ட் வந்துவிட்டதே!)

‘வேண்டாம்...உங்கள் பெயரைப் பார்த்துவிட்டு ரொம்பவும் சின்ன வயதுப் பெண் என்று நினைத்துவிட்டோம்....’

60, 70, 80 களில் நானும் சின்னவளாகத்தான் இருந்தேன்... மனதில் நினைத்துக் கொண்டு ‘இப்பவும் மனசளவில் சின்னவள்தான்....ஹி....ஹி....’ என்றேன். 

(நாளைக்குப் போய் ‘டை’ அடித்துக் கொண்டு வரவேண்டும்...)


‘நீங்க என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?’

‘திரு வை.கோ. சொன்னார்...நீங்கள் ப்ளாக் எழுதுகிறீர்களாம்....’

‘ஓ! ஓ! வைகோ ஸாரா? என்னோட பரம விசிறி ஸார் அவர். எனக்கு கூடிய சீக்கிரம் ‘விசிறிகள் மன்றம்’ கூட ஆரம்பிக்கப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்!’ (இது கொஞ்சம் ‘ஓவர்’ – இடித்தது என் செல்லம்)
ஷ்.....சும்மா இரு என்று அதை அடக்கினேன்.

‘கிட்டத்தட்ட 237 பதிவுகள் எழுதி இருக்கிறேன் ஸார்! எல்லாமே நானே எழுதியது....என் சொந்த முயற்சியில்...’

‘...அப்படியா.....?’

‘ஆமா ஸார்...அவள் விகடனில் கூட ‘வலைப்பூவரசி’ என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்.’

‘ஓ!......’

‘அப்பறம்....ஒருதடவ வலைச்சரம் ஆசிரியராகவும் இருந்தேன்........’

‘இத்தனை எழுதின பின்ன திருப்தி ஏற்பட்டிருக்க வேணுமே?’

‘திருப்திதான். ஆனாலும் தினம் தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்று ஒரு அரிப்பு...’

‘அரிப்பா? மருத்துவரைப் போய் பாருங்கள்....!’

‘ஸார், ஸார் நீங்க தப்பாகப் புரிஞ்சுண்டு இருக்ககீங்க! எழுத வேண்டும் என்று மனசுல சதா ஒரு குடைச்சல்....

‘உங்க அரிப்பு, குடைச்சல்  எல்லாத்துக்கும் ஒரு  நல்ல மருத்துவரைப் பாருங்க. அத்த விட்டுட்டு எங்களைப் படுத்தினால்....’

‘.....ஸார், என்ன சொல்றீங்க?’

‘நிறுத்துங்க!’

என்ன சொல்றீங்க?

‘நிறுத்துங்க...’

‘புரியலையே!’

‘மணிரத்னம் படமெல்லாம் பாக்க மாட்டீங்களா?’

‘...............................!?’

’எழுதறத நிறுத்துங்க....’

‘என்ன சொல்றீங்க?’

‘ஆமாம்மா, நீங்க இனிமே எழுதக் கூடாது...’

‘ஸார், ஸார், இன்னும் ஒரு ஆசை நிறைவேறணும். வோர்ட்பிரஸ் freshly pressed – ல ஒரு முறையாவது என் இடுகை வரணும்...’

‘இது வேறயா?’

‘ஆமா ஸார்....நாற்சந்தி, தமிழ், ரூபன் இவங்க இடுகைகளெல்லாம் வரது....’

‘நீங்களும் முச்சந்தி, கன்னடம், அதிரூப சுந்தரி என்று எழுதினால் வருமோ என்னவோ...?’

‘ஸார், ஸார்....’

‘இதோ பாருங்கம்மா... இப்படியே ஒரொரு ஆசையா சொல்லிகிட்டே இருந்தீங்கன்னா எங்களை யார் காப்பத்துவாங்க? அதனால உடனே நிறுத்துங்க.....’

‘ஸார்! வைகோ ஸார்! என்னக் காப்பாத்துங்க....!’

‘இங்க பாருங்க, நாங்க எல்லோரும் உங்களால பாதிக்கப் பட்டவங்க....யாரும் உதவிக்கு வரமாட்டாங்க...’

‘சிவஹரி...சிவஹரி....நீங்களாவது உதவி செய்யுங்க....’

‘அருமை சகோ...கவலைப் படாதீங்க! நான் இருக்கிறேன்...இன்னிக்கு வலைச்சரத்திலே ஒரு கல்வெட்டுப் பதிவு உங்களைப் பற்றி போட்டிருக்கேன்....அதைப் படிச்சுட்டாவது உங்களோட மனச மாத்திக்கக் கூடாதா? எழுதறத நிறுத்தக் கூடாதா?’

‘யூ டூ சிவஹரி......?

’றேன்.... திடறேன்........நிறுத்திடறேன்....... எழுதறத நிறுத்திடறேன்..... ப்ளாக் எழுதறத நிறுத்திடறேன்......’


                    ********************************************


“ரஞ்ஜனி! ரஞ்ஜனி! எழுந்திரு.....!


"மாதவா! அம்மாவை எழுப்பு... ப்ளாக் எழுத ஆரம்பிச்சு தூக்கத்தலேயும் ப்ளாக் உளறல்!?”


ஹப்பா! கனவா? நல்லவேளை...நாளையிலிருந்து திரும்ப....

'...............லாம்..... தலாம்......எழுதலாம்..........ப்ளாக் எழுதலாம்.......'

என்னுடைய இன்னொரு தளம் இரண்டாம் எண்ணங்கள் 'freshly pressed' - Top blogs, Top post - இல் இடம் பெற்றிருக்கிறது என்பதை மிகவும் சந்தோஷத்துடன் இங்கு தெரிவித்துக் கொள்ளுகிறேன்.











10 கருத்துகள்:

  1. கனவில் நாயகன் பட கமல் மாதிரி அவங்களெல்லாம் நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன் என்று சொல்லி எங்களையெல்லாம் மாட்டிவிடாமல் இருந்ததற்கு நன்றிகள்! :-)

    பதிலளிநீக்கு
  2. அடடா! தோன்றாமல் போய்விட்டதே!

    பாருங்கள் இதுதான் இளம் வயதிற்கும், முதுமைக்கும் உள்ள வேறுபாடு!

    உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான் ஸ்ரீனி!
    வருகைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. இந்தப்பதிவுக்கு ஏற்கனவே பல பின்னூட்டங்கள் வந்துள்ளன.

    இந்தப்பதிவினைப்போலவே அவையும் சுவையாகவே இருந்தன.

    இணைப்பு இதோ:

    http://ranjaninarayanan.wordpress.com/2012/10/26/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4/

    இது எல்லோருக்குமான பொதுவான தகவலுக்காக.....

    பதிலளிநீக்கு
  4. வரிக்கு வரி படித்து வைகோ அவர்கள் எழுதிய பின்னூட்டங்கள் இந்தப் பதிவுக்கு சுவை சேர்க்கின்றன என்பதையும் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

    பதிவர்களுக்கு இந்த பதிவுலக ஜாம்பவான் வழங்கி இருக்கும் அறிவுரைகளும் அற்புதம்.

    பதிவை விட பின்னூட்டம் போட்டு புகழ் பெற்று விட்டார் வைகோ அவர்கள்!
    எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாராட்டு இது.

    நன்றி, நன்றி, நன்றி!

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அம்மா
    அருமையான கதை ,26,12,2012இன்று உங்களின் இந்த கதை வலைச்சரம் வலைப்பூவில் வந்திருக்கு பாருங்கள் வாழ்த்துக்கள் அம்மா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  6. வாருங்கள் ரூபன்!
    தகவலுக்கு நன்றி!
    போய் பார்த்துவிட்டு நன்றியும் சொல்லிவிட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  7. அன்பின் ரஞ்சனி நாராயணன்

    வலைச்சரம் வழியாக வந்தேன்

    நல்லாவே இருக்கு - படிச்சுச் சிரிச்சேன் - மகிழ்ந்தேன் -

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  8. வாருங்கள் அன்பின் சீனா ஐயா!
    உங்கள் வரவு எல்லையில்லா சந்தோஷத்தை கொடுக்கிறது.
    அவ்வப்போது வலைச்சரத்தில் அடையாளம் காட்டப்படும்போது மனதில் உண்டாகும் உவகையை சொல்ல வார்த்தைகள் இல்லை.

    வருகைக்கும், ரசித்ததற்கும் நன்றிகள் ஐயா!

    பதிலளிநீக்கு