ஞாயிறு, 7 செப்டம்பர், 2014

முதுமையின் ரகசியங்கள்

old age advice


  • நடுவயதிற்கு முன் முதுமையைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.
  • நடுவயதைத் தாண்டிய பின் முதுமை வந்துவிட்டதே என்று வருத்தப்படாதீர்கள்.
  • இயலாமை வருவதற்கு முன் வாழ்க்கையை அனுபவியுங்கள்.
  • நடக்கக் கூட முடியாமல் போன பின் தவறவிட்ட வாழ்க்கையை நினைத்து வருந்துப் பயனில்லை. 
  • உடலில் தெம்பு இருக்கும்போதே ஆசைப்பட்ட இடங்களுக்கு போய்வாருங்கள்.
  • வாய்ப்பு கிடைக்கும்போது பழைய பள்ளித் தோழர்கள், அலுவலகத்தில் உடன் வேலை செய்தவர்கள், பழைய நண்பர்கள் என்று எல்லோரையும் சந்தியுங்கள்.
  • வங்கியில் பணத்தைப் போட்டு வைத்து காவல் காப்பதை விட, உங்களுக்குத் தேவையான போது செலவழியுங்கள். வயதாக ஆக உங்களுக்குத் தேவையானவற்றை செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் குழந்தைகள் அவர்களுக்கு வேண்டிய பணம் காசு முதலானவற்றை தாங்களே சம்பாதித்துக் கொள்ளுவார்கள்.
  • உங்கள் ஆரோக்கியத்திற்குத் தேவையானவற்றை சாப்பிடுங்கள்.
  • ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பனவற்றை கொஞ்சமாக, மாதத்திற்கு ஒரு முறை சாப்பிடுங்கள். எதையும் அறவே ஒதுக்காதீர்கள். 
  • உடல்நலகுறைவு ஏற்பட்டால் நம்பிக்கையுடன் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
  • உடல்நலகுறைவு ஏற்பட்டால் கவலைப் படாதீர்கள்; வருத்தப்படாதீர்கள்.
  • வாழ்க்கை என்றால் பிறப்பு, முதுமை எய்துதல், உடல்நலகுறைவு, இறப்பு இதெல்லாம் சேர்ந்ததுதான். 
  • யாருக்கும் இவற்றில் எந்த விதச் சலுகையும் கிடையாது.
  • முடிக்க வேண்டிய வேலைகளை ஒன்று பாக்கி இல்லாமல் முடித்து விடுங்கள். விடை பெறும்போது நிம்மதியாக மன அமைதியுடன் விடை பெறலாம்.
  • மருத்துவர்களிடம் உங்கள் உடலை ஒப்படையுங்கள். கடவுளிடம் உங்கள் வாழ்க்கையை ஒப்படையுங்கள். உங்கள் மனம் உங்களின் வசம் இருக்கட்டும்.
  • கவலைப்படுவது உங்கள் உடல்நலகுறைவை சரி செய்யும் என்றால் தாராளமாகக் கவலைப்படுங்கள்.
  • கவலைப்படுவது உங்கள் ஆயுளை நீட்டிக்கும் என்றால் கவலைப்பட்டுக் கொண்டே இருங்கள்.
  •  கவலைபடுவதில் உங்களுக்கு சந்தோஷம் கிடைக்குமென நீங்கள் நினைத்தால் மறுப்பே இல்லாமல் கவலைப்படுங்கள்.
  • ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.
  • உங்களுக்கு அருகில் இருக்கும் உங்கள் பழைய,  நீண்ட நாளைய துணையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். யாரோ ஒருவர் முதலில் விடை பெற வேண்டும், இல்லையா?
  • எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் உங்கள் பழைய நண்பர்களுடன் பேசி சிரியுங்கள். நாள் செல்ல செல்ல இந்த வாய்ப்புகள் குறைந்து போகும்.
  • தினமும் புன்னகையுங்கள். வாய்விட்டு சிரியுங்கள்.
  • அழவேண்டுமா, சத்தமாக அழுது மனப்பாரத்தை இறக்கி விடுங்கள்.
  • கனவுகள் நின்றுவிட்டால் வாழ்க்கையும் நின்றுபோகும்; நம்புவதை நிறுத்தும்போது நம்பிக்கை போய்விடும்; அக்கறை போய்விட்டால் அங்கு அன்புக்கு இடமில்லை. இன்பதுன்பங்களை பங்கு போட்டுக்கொள்ள முடியாதபோது நட்பு முறிந்துவிடும்.
  • ஓடிக்கொண்டிருக்கும் நீர் போல வாழ்க்கை. இயன்றவரை சந்தோஷமாக வாழ்க்கையை நடத்திச் செல்லுங்கள்.
  • எல்லா முதியவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

23 கருத்துகள்:

  1. பொன்னெழுத்தில் பதிய வைக்க வேண்டிய அறிவுரைகள்.. திரும்பத் திரும்ப படித்துக் கொண்டேயிருக்கிறேன்!... குறிப்பாக,கீழிருந்து மூன்றாவது!.. அற்புதமான பகிர்வு!.. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பார்வதி!
      வருகைக்கும், படித்து ரசித்ததற்கும் நன்றி!

      நீக்கு
  2. பயனுள்ள தகவல்கள் .. நன்றிகள் பகிர்வுக்கு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இராஜராஜேஸ்வரி!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  3. அருமையான் அறிவுரைகள் ! அவசியம் தேவை முதியோர்களுக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராஜி!
      வருகைக்கும் ரசித்துப்படித்ததற்கும் நன்றி!

      நீக்கு
  4. வயதாகிறதே என்று வருத்தப்படாதீர்கள்
    அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை..

    என்ற பொன்மொழிதான் நினைவுக்கு வந்தது நல்லதொரு பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முனைவரே!
      உங்கள் வரவு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  5. ஒவ்வொரு வரியும் உண்மையானவை. இவ்வளவையும் நினைவு வைத்துக் கோர்வையாக எழுத உங்களால்தான் முடியும். ப்ரிண்ட் எடுத்து ஒட்ட வேண்டியதுதான் பாக்கி.

    முதியவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சித்ரா!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  6. உங்கள் மனம் உங்களின் வசம் இருக்கட்டும்!..

    சிறப்பான அறிவுரைகள்.. இனியதொரு பதிவு!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துரை செல்வராஜூ!
      வருகைக்கும் படித்து ரசித்ததற்கும் நன்றி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. வாங்க துளசி,
      உங்கள் வலைப்பக்கம் வந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. கூடிய விரைவில் மறுபடி எனது ஊருசுற்றலை ஆரம்பிக்கிறேன்.
      வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி!

      நீக்கு
  8. ஆவ்வ்வ்... எத்தணை வலைப்பதிவுகள் வைத்துள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க பாண்டியன்!
      கடைசி பெஞ்சில் உட்கார்ந்தாலும் எனக்கு உங்கள் பெயர் தெரியுமே!!!
      மொத்தம் மூன்று வலைத்தளங்கள். இங்கும் வந்ததற்கு எனது நன்றி!

      நீக்கு
  9. அருமை சகோதரியாரே
    அருமையான அலோசனைகள்
    முதுமைக்கு வருந்தாதே, எதிர்கொள்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஆசிரியர் ஐயா!
      வருந்தாத முதுமை இனிக்கும், இல்லையா?
      வருகைக்கும் நல்ல ஆலோசனைக்கும் நன்றி!

      நீக்கு
  10. அம்மா இன்றைய வலைச்சரத்தில் இந்த இடுகையை நன்றியுடன் பகிர்ந்திருக்கிறேன்..

    http://blogintamil.blogspot.in/2014/09/blog-post_8.html

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. தகவலுக்கு நன்றி, இராஜராஜேஸ்வரி!

    பதிலளிநீக்கு