வெள்ளி, 26 செப்டம்பர், 2014

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் விபரம்




Inline images 1


உலக நாடுகள் வெகு நாட்களுக்கு முன்பே தடை செய்த பின்பும் இந்தியாவில் விற்பனையில் இருந்த இந்த மாத்திரைகள் தாமதமாகதான் தடை செய்யப்பட்டன. 

ஆனால் இன்னமும் பல மருந்துக்கடைகளில் விற்கவும் செய்கின்றன.

இதோ அந்த தடைசெய்யப்பட்ட மருந்துகளின் விபரம்.

1 . அனால்ஜின் ( Analgin)
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு

2 . நிமிசுலைட் (Nimisulide)
பயன்பாடு - வலி நிவாரணி மற்றும் காய்ச்சல்
பக்க விளைவு - கல்லீரல் செயல் இழப்பு

3 . பினைல் ப்ரோபநோலமைன் ( phenyl propanolamine )
பயன்பாடு - சளி மற்றும் மூக்கு ஒழுகுதல்
பக்க விளைவு - மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் திடீர் அடைப்பால் சுயநினைவு இழத்தல்

4 . சிசாபிரைடு ( cisapride )
பயன்பாடு - மலச்சிக்கல் மற்றும் அதிக அமிலம் சுரத்தலை கட்டுப்படுத்து
பக்க விளைவு - இதயத் துடிப்பு சீர்கேடு

5 . குயிநோடக்ளர் (quinodochlor )
பயன்பாடு -வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு - கண்பார்வை பாதிப்பு

6 . பியுரசொளிடன் (Furazolidone )
பயன்பாடு - வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்துதல்
பக்க விளைவு – புற்றுநோய்

7 . நைட்ரோபியுரசொன் (Nitrofurozone )
பயன்பாடு - கிருமிகளை அழித்தல்
பக்க விளைவு – புற்றுநோய்

8 . ஆக்சிபென் பியுட்டசொன் ( Oxyphenbutozone )
பயன்பாடு - வலி நிவாரணி
பக்க விளைவு - எலும்பு மஜ்ஜை சீர்கேடு

9 . பைப்பரசின் ( Piperazine )
பயன்பாடு - வயிற்றுப் புழுக்களை அழித்தல்
பக்க விளைவு - நரம்புச் சிதைவு

10 . பினப்தலின் (Phenophthalein )
பயன்பாடு - மலமிலக்கி
பக்க விளைவு – புற்றுநோய்

சரி, இந்த மருந்துகளின் விற்பனைப் பெயர்கள் என்ன தெரியுமா?

1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,

2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol

3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,

4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride

5 . பியுரசொளிடன் - Furoxone

6 . பைப்பரசின் -Piperazine citrate

7 . குயிநோடக்ளர் - Entero quinol


இதைத்தான் நம் மருத்துவர்கள் தடை செய்யப்பட்டாலும் பரவாயில்லை என்று எழுது எழுதுன்னு எழுதுகிறார்கள்.


இதற்கு முழுக்காரணமும் மருந்து நிறுவனங்களும் மருத்துவர்களுமே தான் -உங்கள் அன்பானவர்களை எச்சரியுங்கள்





தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்

2 கருத்துகள்:

  1. பயனுள்ள பதிவு!..
    கழுபிணி இலாத உடலும் என்று அபிராமபட்டர் வேண்டிக் கொண்டதைப் போல நாமும் - அம்பாளிடம் வேண்டிக் கொள்வோம்!..

    பதிலளிநீக்கு
  2. பிற நாடுகளில் தடை செய்ப்பட்ட மருந்துகளைத் தெரிந்தே எழுதுகிறார்களே, மருத்தவர்கள் அவர்களை என்னென்று சொல்வது
    தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு இம்மாத்திரைகளைக் கொடுப்பார்களா

    பதிலளிநீக்கு