ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

காந்தி கணக்கு என்றால் என்ன?



காந்தி கணக்கு என்றாலே கிட்டதட்ட திரும்பி வராது  என்கிற அர்த்தத்தைதான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். ஆனால், காந்தி கணக்கு என்றால் என்ன என்பதற்கான உண்மையான அர்த்தம் என்னவென்று பலருக்கும் தெரியாது. அதை இப்போது தெரிந்துகொள்வோம்.

மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்டிருந்தபோது, அவருக்கு வியாபாரிகள் அத்தனை பேரும் தார்மீக ஆதரவு அளித்தார்கள். அவர்கள் காந்தியிடம் நேரடியாக எங்களால் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாது. ஆனால், எப்படியாவது உங்கள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிப்போம். இதில் கலந்துகொள்ள வரும் தொண்டர்களை எங்கள் கடைகளில் எது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ள சொல்லுங்கள். பணம் தர வேண்டாம். அடையாளம் தெரியாமல் பணம் கேட்க நேரும்போது, 'காந்தி கணக்கு' என்று எங்களுக்கு புரியும்படி சொன்னால் போதும். நாங்கள் அவர்களிடம் பணம் கேட்க மாட்டோம்என்றார்களாம் அந்த வியாபாரிகள்.

அப்படி வந்ததுதான் காந்தி கணக்கு. ஆனால், நாம் இதற்கு அர்த்தம் வைத்திருப்பதோ புரியாத கணக்கு.

ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..

நன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் 



15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. வாங்க துளசி!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  2. உண்மையில் இதுவரை தெரியாத அர்த்தம்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரமணி ஸார்!
      எனக்கும் கூட இந்தத் தகவலைப் படித்தபின் தான் தெரிந்தது.
      வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

      நீக்கு
  3. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..

    உண்மையை உணர வைத்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க இராஜராஜேஸ்வரரி!
      வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. வாங்க தனபாலன்!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  5. சுவாரசிய தகவல் .
    மேலும் அந்தக் குறிப்பிட்ட காலங்களில் கடைகளில்,நிறுவனங்களில் கணக்கு சரிபார்க்கப் படும்போது டேலி ஆகாத தொகையை உப்பு சத்யாக்ரகத்திற்கு கொடுத்ததாக கணக்கு எழுதிவிடுவார்களாம். அதனால் எது என்று தெரியாத கணக்கை காந்தி கணக்கு என்று சொல்வார்கள் என்று எங்கேயோ படித்தேன்.
    நன்றி மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க முரளிதரன்!
      மேலதிகத்தகவல் கொடுத்திருக்கிறீர்கள்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  6. ஓசியில கிடைப்பது என்றும் சொல்லப்படுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தோழர் வழிப்போக்கன்!
      நீங்கள் சொல்லியிருப்பதுவும் சரியாக இருக்கலாம்.
      வருகைக்கும் கூடுதல் தகவலுக்கும் நன்றி!

      நீக்கு
  7. ஒவ்வொரு சொல்லிலும் அதன் உள் அர்த்தத்தை புரிந்து செயல்பட்டால் அறிவு விசாலமாகும்..//

    உண்மை.
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கோமதி!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  8. தந்தை சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன் ரஞ்சனி.

    எத்தனை காந்தி கணக்குத் தப்பாக உபயோகிக்கப் பட்டது என்றும் நகைச்சுவையாகச் சொல்வார்.
    இன்னோரு விஷயம் ரஞனி நீங்கள் பதிவிட்டிருக்கும் பதிவர் சந்திப்பு பதிவு மிக அருமை. அங்கே பதியமுடியாமல் இங்கெ சொல்கிறேன். அடுத்த தடவை வரும்போது வீட்டிற்கு வரவேண்டும்.

    பதிலளிநீக்கு