திங்கள், 24 ஜூன், 2013

குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லைஇந்தியாவையே உலுக்கிய டெல்லி இளம் பெண் பாலியல் பலாத்காரச் சம்பவம் நிகழ்ந்த மறுநாள் ஒரு மூன்று வயதுச் சிறுமி பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தாள். அவளது ஆடை முழுவதும் ரத்தமும் வாந்தியும் சிதறியிருந்தன. அவள் தந்தை ககன் ஷர்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 2003ல் கொல்கத்தாவிலிருந்து மேற்கு தில்லியில் உள்ள ஒரு சேரிப் பகுதிக்கு சற்று மேலான வாழ்க்கைக்காக குடி பெயர்ந்தவர். என்ன ஆச்சு என்று விசாரித்தபோது அந்தச் சிறுமி தட்டுத்தடுமாறி தனக்கு நேர்ந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள்.

ஆழம் பத்திரிகை ஜூன் இதழில் வெளிவந்த எனது கட்டுரை இணைப்பைத் தொடர்ந்து படிக்க இந்தக் கட்டுரையின் எடிட் செய்யப்படாத பகுதிகள்:

இந்தக் கட்டுரைகளைப் படித்த பின் இவையெல்லாம் எங்கோ நடப்பவை என்று அலட்சியப் படுத்த வேண்டாம், தயவு செய்து. வெளியில் மட்டுமல்ல; வீட்டிலும் கூட குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என புரிந்து கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு புரியும் வகையில் பேசுங்கள். அவர்களின் பாதுகாப்பிற்கு நீங்கள் இருக்கிறீர்கள் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் விதையுங்கள்.
3 கருத்துகள்:

  1. கொடுமை.. கோபமாக வருகிறது..பயமாகவும் இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  2. இதை எல்லாம் படிக்கும் போதும், கேட்கும் போதும் மனிதர்கள் ஏன் இப்படி கொடுமையானவர்களாய் இருக்கிறார்கள் ?என்று கவலையாகவும், வருத்தமாகவும் உள்ளது.விளையும் பயிரை, வளரும் கொடியை,சிறு அரும்பை கசக்கி முகர்ந்தவர்களை அந்த கணமே நடு ரோட்டில் பலரும் பார்க்க கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்.

    பதிலளிநீக்கு