இங்கிலாந்தின் முதல் பெண் பிரதமரும், இரும்புப் பெண்மணியுமான மார்கரெட் தாட்சர் 8 ஏப்ரல் 2013 அன்று மரணமடைந்தார். சில காலமாகவே அவர் அல்ஜீமர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரது இறுதிக் கணங்கள் அமைதியாகக் கழிந்தன என்று அவரது மகன் மற்றும் மகள் அவரது மரணம் பற்றிய தங்களது அறிக்கையில் கூறியிருந்தனர். ஆனால் அவருடைய ஆட்சிக்காலம் அமைதியாக இருந்திருக்கவில்லை.
13 அக்டோபர் 1925 அன்று மார்கரெட் ஹில்டா ராபர்ட்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்து நாட்டில் கிராந்தம் என்ற ஊரில் பிறந்து அந்நாட்டின் பிரதமராக தொடர்ச்சியாக மூன்று முறை (1979 &1990) இருந்தவர் மார்கரெட் தாட்சர். பத்தாண்டுகளுக்கும் மேலாக கன்செர்வேடிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று நவீன இங்கிலாந்தின் சரித்திரத்தில் குழப்பம் மிகுந்த, கலவரம் நிறைந்த காலகட்டத்தில் பிரதமர் பதவி வகித்த, முரண்பாடுகள் நிறைந்த தலைவர் இவர்.
ஆழம் பத்திரிகை மே மாத இதழில் வந்த எனது இந்தக் கட்டுரையை படிக்க:
மார்கரெட் தாட்ச்சர் சொடுக்கவும்.
நன்றி அம்மா... பார்க்கிறேன்...
பதிலளிநீக்குநன்றி நான் சொல்ல வேண்டும் உங்களுக்கு எல்லாப் பதிவையும் படித்து கருத்துரையும் கொடுப்பதற்கு!
நீக்கு
பதிலளிநீக்கு// மார்கரெட் தாட்சரின் கொள்கைகள், அவரது கண்ணோட்டங்கள், நடை உடை பாவனைகள், செய்ய நினைத்தை விட்டுக் கொடுக்காமல் சாதிக்கும் முறை ஆகியவை தாட்சரிசம் என்ற பெயரால் அடையாளம் காணப்படுகின்றன. இங்கிலாந்தின் மிகச் சிறந்த பிரதமர்களுள் நான்காவது இடத்தைப் பெற்றவர் என்கிறது ஒரு வாக்கெடுப்பு. //
இந்தியப் பிரதமர்களில் எனக்கு இந்திரா காந்தியை மிகவும் பிடிக்கும். அவரைப் போல்வே இங்கிலாந்தின் பிரதமராக இருந்த மார்கரெட் தாட்சரையும் பிடிக்கும். இருவருமே அப்போது அவரவர் நாடு இருந்த நிலைமையில் சில கொள்கை முடிவுகளை எடுத்தார்கள்.
வாருங்கள் இளங்கோ!
நீக்குஎனக்கும் தாட்சரை பிடிக்கும். பத்திரிகைக்கு என்று எழுதும்போது அவர்கள் நாம் எழுதுவதை அவர்களது நிலைக்குத் தகுந்தாற்போல எடிட் செய்து விடுகிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்று.
எந்தப் பிரதமராக இருந்தாலும் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுப்பது தவிர்க்க முடியாதது இல்லையா?
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!