சனி, 1 மார்ச், 2014

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

கடன் வாங்குபவர்கள் தெரிந்து கொள்ள‍ வேண்டியது


இந்தியாவில் 91% மக்களுக் கு இதுபற்றி எதுவும் தெரி யாதாம்!!!
டெல்லி: நம் நாட்டில் கடன் வாங்கும் பல பேருக்கும் கட ன் கட்ட முடியாமல் போனா ல் என்னாகும் என்பதை பற் றியும், கடன் வாங்கும் விஷ யத்தில் தங்களின் நம்பகத் தன்மை மதிப்பிடப்படுகிறது (கிரெடிட் ஸ்கோர்) என்பதை பற்றியும்
தெரிவதில்லை என்று ஒரு சர்வே கூறுகிறது.
இந்த சர்வேயில் பங்கு பெற்றவர்களில் 91 சதவீத பேருக்கு தங்களின் கடன்களை கட்ட தவறு ம்போது ஏற்பட போகும் விளைவு களை பற்றி தெரியவில்லை என் று கிரெடிட்சுதார் என்ற முன்ன ணி கடன் ஆரோக்கியமேம்பாடு நிறுவனம் கூறி யுள்ளது.
8 நகரத்திலிருந்து 300 பேருக்கு மேல் கலந்து கொண்ட இந்த சர்வேயில், 85 சதவீத பேருக்கு கடன் செயலகம் என்று ஒன்று இருப்பதே தெரியவில்லை. இ ந்த செயலகம் கடன் வாங்கிய வர்களின் விவரத்தை சேகரித்து வைத்திருக்கும். பணம் கொடுப் பவர்களுக்கு கடன் வாங்குபவர் களின்(கடன் விஷயத்தில்அதை  திருப்பி கொடுக்கும் அவர்களி ன்) நம்பகத் தன்மையை பற்றி தெளிவாக கூறி விடும்.
டெல்லி மற்றும் பூனேயில் நான்கில் ஒரு நபருக்கு இந்தகடன் செயலகத்தை பற் றிய அறிவும், புரிதலும் இருக்கிறது. இதுபோக டெல்லி, பெங்களூரு ம ற்றும் பூனேயில் சர்வே யில் பங்குபெற்றவர்களி ல் 10 சதவீத பேருக்கு த ங்களின் கடன் மதிப்பீட் டின் புள்ளிகள் தெரிந்தி ருந்தது.
“இந்த சர்வே நடத்திய அடிப்படை காரணம், கடன் வாங்குபவர்கள் கடன் வலுக்குறைவுகளை சந்தித்திருந்தால் அதன்காரணத்தை பற்றியும் விளைவுகளை பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எதிர்மறை யான கடன் விவரங்கள் மற்றும் கு றைவான கடன் மதிப்பீட்டு புள்ளிக ளால் அவர்களுக்கு கடன் அளிக்கப் படவில்லை என்ற காரணங்களை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டு ம் என்று நாங்கள் விரும்புகிறோம்.” என்று கிரெடிட் சுதார் நிறுவனத்தின் துணை நிறுவனர்களான அருண் ராமமூர்த்தி மற்றும் கௌரவ் வத் வாணி கூறியுள் ளார்கள்.
இந்த சர்வேயில் கடனின் பாதுகாப்புதான் முக்கிய பிரச்சனை யாக இருந்தது. அதற்கு காரண ம் சர்வேயில் கலந்து கொண்ட தில் ஒருவர்கூட தங்கள் அடை யாளம் திருட்டு போனதற்கு எந் த  ஒரு பாதுகாப்பு நடவடிக்கை களையும் எடுக்கவில்லை.
மேலும் கலந்து கொண்டவர்க ளில் 92 சதவீத பேருக்கு கடன் செயலகம் தங்களுக்கு அளித்துள்ள கடன் மதிப்பீட்டு புள்ளிகளை பற்றிய எந்த விவரமும் தெரியவில் லை.
இது போக சர்வேயில் க லந்து கொண்டவர்களில் 4 சதவீத பேர்தான் கடந்த ஒரு வருடத்தில் தங்களி ன் கடன் மதிப்பீட்டு புள்ளிகளை கேட்டு அறிந்து வைத்துள்ளா ர்கள். அதே போல் 98 சதவீத பேர்களுக்கு மாதிரி கடன் அறிக் கை ஒன்று கொடுக்கப்பட்ட போ து அதனை அவர்களால் புரிந்து கொள்ள முடி யவில்லை.
“91 சதவீத வாடிக்கையாளர்க ளுக்கு கடனை திருப்பி செலுத் தாமல் போவதால் ஏற்பட போகு ம் விளைவுகள் பற்றிய விழிப்பு ணர்வு இல்லை என்று இந்த சர் வே எடுத்துகாட்டியுள்ளது.” என் று ராமமூர்த்தியும் வத்வாணியு ம் கூறியுள்ளார்கள்.
“வாடிக்கையாளர்கள் தங்களின் கடன் மதிப்பீடு மற்றும் கட னை திருப்பி செலுத்தாமல் போவ தால் ஏற்படபோகும் விளைவுக ளைபற்றியும் அறிந்திருந்தால் பல பிரச்சனைகளை தவிர்த்திருக்கலா ம் என்று நாங்கள் நினைக்கிறோ ம். மேலும் தொழில்முறை கடன் ஆலோசனை என்பது இந்தியாவி ல் இல்லை என்பதையும் இந்த சர் வே மூலமாக நாங்கள் அறிந்து கொண்டோம். இந்த கருத்தை வழ ங்க துவங்கினால் கடன் ஆலோச னை சேவைகளுக்கு அதிக இடங்க ள் உருவாகும்.” என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.


தகவல், நன்றி: திரு அனந்தநாராயணன்

5 கருத்துகள்:

  1. // தங்களின் கடன்களை கட்ட தவறும்போது... //

    கட்ட வேண்டும் என்கிற நினைப்பு வந்தால் தானே...? அநேகமாக சதவீதம் 100...!

    அவர்கள் சரியாகத் தான் சொல்லி உள்ளார்கள்... செயல்படுத்தினால் நல்லது...

    பதிலளிநீக்கு
  2. நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவு. ஆனால் கிரெடிட் கார்டு வைத்திருக்காமல் இருந்தால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் தவிர்க்க முடியாதது போல் ஆகிவிட்டதே!

    பதிலளிநீக்கு
  3. முக்கியமான பதிவு இது. நன்றி. என் சொந்த பஞ்சாயத்தும் இதில் உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. ரெம்ப, ரெம்ப, பயனுள்ள பதிவு , அம்மா உக்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்

    -அன்புடன்-
    S. முகம்மது நவ்சின் கான்.

    பதிலளிநீக்கு