செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

ஒரு குழந்தை, ஒரு ஆசிரியர், ஒரு எழுதுகோல், ஒரு புத்தகம்!





ஆகஸ்ட் ஆழம் இதழில் வெளியான எனது கட்டுரை 



உலகை மாற்ற இவை போதும் என்கிறாள் தனது 16 வது பிறந்த நாளை  ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாடிய மலாலா.


பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதை பிரசாரம் செய்ததற்காக  தாலிபான் தீவிர வாதிகளால் தலையில் சுடப்பட்ட, பாகிஸ்தானைச் சேர்ந்த, பதின்மவயது சிறுமி மலாலா அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி இது.


அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?’ என்று கேட்கும் தாலிபான்களுக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா திருக்குரானில் எங்காவது எழுதியிருக்கிறதா, பெண்கள் படிக்கக் கூடாது பள்ளிக்குப் போகக்கூடாது என்று?’ என்ற எதிர் கேள்வியை தனது விடையாக முன் வைக்கிறாள்.


சென்ற வருடம் அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி பள்ளிவிட்டு வீட்டுக்கு வருகையில் மலாலாவும் மற்ற சிறுமிகளும் பயணம் செய்த சிற்றூந்து குறிபார்க்கப்பட்டு சுடப்பட்டது. தீவிரவாதி ஒருவன் மலாலாவின் பெயரை உரக்கக் கூவிக் கொண்டே அவளை சுட்டான். ஆனால் அதிஷ்ட வசமாக மலாலா இந்தத் தாக்குதலிலிருந்து சிகிச்சைக்குப் பின் உயிர் தப்பினாள். பாகிஸ்தானின் அவசர சிகிச்சை மருத்துவ பிரிவில் இருந்து உடனடியாக லண்டன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள். பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின் 5 மாதங்கள் கழித்து  லண்டன் பிர்மிங்ஹம் பள்ளியில் சேர்க்கப் பட்டாள் மலாலா.


ஐக்கியநாடுகள் சபையின் உலக கல்வி சிறப்புத் தூதரான திரு கோர்டன் பிரவுன் மலாலாவை ஐக்கிய நாடுகள் சபையில் ஜூலை 16 மலாலாவின் பிறந்தநாள் அன்று உரையாற்றுமாறு அழைத்தார். மலாலாவின் பெயர் நோபல் பரிசிற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.

தனது உரையில் ஒவ்வொரு குழந்தையும் இலவசக் கட்டாய கல்வி பெறும் வசதியை செய்து கொடுக்குமாறு உலகத் தலைவர்களைக் கேட்டுக் கொண்டாள் மலாலா.


மேலும் படிக்க : மலாலா 

6 கருத்துகள்:

  1. சரியான எதிர்க் கேள்வி... மலாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தனபாலன்!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  2. அருமையான அவசியம் அனைவரும்
    படிக்கவேண்டிய பதிவு
    விரிவான பகிர்வுக்கு
    மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ரமணி ஸார்!
      பதிவர் விழாவில் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      நீக்கு
  3. மலாலாவின் துணிவும், தன்னம்பிக்கையும் வாழ்த்த தோன்றும் அந்த குழந்தையை.
    ஆழம் இதழில் இந்த கட்டுரை வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாருங்கள் கோமதி!
    உண்மைதான். அவளைப் பார்த்து பிற பெண்களும் தைரியமாக தங்களை தாங்களே காத்துக் கொள்ள முன் வரவேண்டும்.

    வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு