ஜூலை 'ஆழம்' இதழில் நான் எழுதி வெளிவந்த திருமதி அருணா ராய் பற்றிய கட்டுரை.
‘எனக்கு டாக்டர் மன்மோகன்சிங் மீது எந்த வருத்தமும் இல்லை; எனது வருத்தமெல்லாம் அரசாங்கத்தின் மீதும், மிகவும் முக்கியமான ஒரு சட்டத்தை நிறைவேற்றமுடியாத நாடாளுமன்றத்தின் மீதும்தான்!’ கடந்த மாதம் தேசிய ஆலோசனைக் குழுவிலிருந்து ராஜினாமா செய்திருக்கும் சமூக ஆர்வலர் அருணா ராய் தனது செயலுக்கு அளித்திருக்கும் விளக்கம் இது.
உணவுப் பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்றவற்றுக்கு அரசு தேவையான முக்கியத்துவம் கொடுக்காதது வருத்தமளிக்கிறது என்கிறார் அருணா ராய். ‘இந்த நாட்டில் 60% மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். பசியால் வாடும் பல லட்சம் ஏழை மக்களைப் பார்த்து அக்கறைப்படாமல் வேறெதற்கோ முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அமைப்பைப் பார்த்து வருத்தமாக இருக்கிறது.’
கடந்த ஒரு வருடமாகவே தேசிய ஆலோசனைக் குழுவின் நடவடிக்கைகளை விமரிசித்து வந்த அருணா ராயின் பதவிக்காலம் மே 31 அன்று முடிவடைவதாக இருந்தது. அதனை நீட்டிக்கவேண்டாம் என்று சோனியா காந்தியை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய ஆலோசனை குழுவிலிருந்து (என்ஏசி) அருணா ராய் விலகுவது இது முதல் முறை அல்ல. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முதல் முறையாக அரசு அமைத்தபோது இந்தக் ஆலோசனைக் குழுவில் (2004 &2006) அங்கத்தினராக இருந்த அருணா, தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத சட்டம் (MGNREGA) ஆகியவற்றில் குடிமக்களின் உரிமைகளை உறுதிசெய்ய முக்கியப் பங்காற்றியிருக்கிறார். குறைந்தபட்ச பொதுத் திட்டத்தின் கொள்கைகளைப் பற்றிய குழுவின் பரிந்துரையை அரசு ஏற்காத காரணத்தால் 2006 ஆம் ஆண்டு அதிலிருந்து விலகினார். ஆனால் ஐ.மு.கூ. இரண்டாம் முறையாக பதவி ஏற்றபோது இந்தக் குழுவின் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பதவி ஏற்றார்.
மீதி கட்டுரை படிக்க: மாற்றத்தின் கதை
திருமதி. அருணா ராய் போன்ற சமூக அக்கறை கொண்ட மனிதர்களை நிச்சயம் பாராட்டவே வேண்டும். மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசியல் வாதிகள் மத்தியில் இத்தகைய உள்ளங்கள் அவர்களை இடித்துரைக்கும் செயலில் இறங்கியமை நல்லதொரு முன் உதாரணம்.
பதிலளிநீக்குவாருங்கள் நிரஞ்சன் தம்பி!
நீக்குஇந்தக் கட்டுரைக்காக திருமதி அருணாவின் வாழ்க்கை முழுவதும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. என்ன ஒரு அதிசயமான பெண்மணி என்று வியந்து போனேன். சமூக சேவைக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறார் இவர்.
வருகைக்கும் உங்கள் கருத்துக்களை பரிந்து கொண்டதற்கும் நன்றி!
அதிசயமான பெண்மணியும் சமூக சேவகியுமாகிய திருமதி அருணா அவர்களைப்பற்றி பல விஷயங்களைப், பகிர்ந்து கொண்டுள்ளதற்கு, மிக்க நன்றி.
நீக்குவாருங்கள் கோபு ஸார்!
நீக்குவருகைக்கும் படித்து ரசித்ததற்கும் நன்றி.
ஆழம் இதழில் படித்து விட்டு மருதனிடம் உங்களைப் பற்றி பாராட்டியும் தள்ளிவிட்டேன்.
பதிலளிநீக்குவாருங்கள் ஜோதிஜி!
நீக்குஇவ்வளவு மனம் விட்டுப் பாராட்டும் உங்கள் பெரிய மனது யாருக்கு வரும்? உங்கள் இந்தப் பாராட்டுரையை வீட்டில் அனைவருக்கும் காட்டி மகிழ்ந்தேன். மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி!
திருமதி அருணா ராயைப் பற்றித் தெரிந்து கொண்டேன். இத்தனை விளக்கமாக எங்கும் படிக்கக் கிடைக்காது என்பதே உண்மை.நன்றி ரஞ்சனி அருமையான ஒரு கட்டுரையை பகிர்ந்து கொண்டதற்கு.
பதிலளிநீக்குவாருங்கள் ராஜி!
நீக்குஇன்னும் நிறைய இருக்கிறது ராஜி இவரைப் பற்றி தெரிந்து கொள்ள. எனக்கு நேரம் கிடைக்கும்போது பகிர்ந்து கொள்ளுகிறேன். இவர்களைப் போன்றவர்கள் நமக்கு பெரிய இன்ஸ்பிரேஷன்!
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி!
அதிசய பெண்மணி அருணா ராய் செய்துவரும் சமூக சேவைகளுக்கு பாராட்டுக்கள் அதனை எல்லோரும் அறியும்படி எழுதிய உங்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாருங்கள் விஜயா!
நீக்குவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
அருமையான நடையில் அழுத்தமாக எழுதியிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாருங்கள் நந்தினி!
நீக்குவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
'ஆழம்' இதழில் நான் எழுதி வெளிவந்த திருமதி அருணா ராய் பற்றிய கட்டுரை.//
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ரஞ்சனி.
உணவுப் பாதுகாப்பு, ஓய்வூதியம் போன்றவற்றுக்கு அரசு தேவையான முக்கியத்துவம் கொடுக்காதது வருத்தமளிக்கிறது என்கிறார் அருணா ராய்.//
உண்மைதானே!
அருமையான கட்டுரை.
வாருங்கள் கோமதி!
நீக்குவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!
இக்கட்டுரையின் மூலம் அருணா ராய் பற்றி தெரிந்துகொண்டேன். இல்லையென்றால் நான் எங்கே அவரைப்பற்றி தேடிப்பிடித்து படிக்கப்போகிறேன்? நன்றிங்க.
பதிலளிநீக்குவாருங்கள் சித்ரா!
நீக்குசெய்தித் தாள்களில் இவரைப்பற்றி படித்திருக்கிறேன். இந்தக் கட்டுரை எழுத வேண்டி நிறைய விஷயங்களைப் படித்தபோது தான் நானும் இவரைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
வலையுலகில் கணினி அனுபவம் என்ற தலைப்பில் தொடர்பதிவு ஒரு சங்கிலித் தொடர் போல நீண்டு கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் ஏற்கனவே இன்னொரு பதிவரால் தொடர் எழுத அழைக்கப்பட்டவரை, நானும் அழைத்து குழப்ப விரும்பவில்லை. எனவே தொடருக்கு அழைக்கப்படாத எனக்கு அறிமுகமானவர்களை அன்புடன் எழுத அழைக்கின்றேன். அவர்களுள் நீங்களும் ஒருவர்.
பதிலளிநீக்கு( எனது கணினி அனுபவங்கள் ( தொடர் பதிவு )
http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_25.html )
வாருங்கள் இளங்கோ!
பதிலளிநீக்குநிச்சயம் எழுதுகிறேன். இதை எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சன்மானமாகக் அருதுகிறேன். அழைப்புக்கு நன்றி!
அதிசய பெண்மணி அருணா ராய் ஒரு அவர்களுக்கு ஒரு கோயில்கட்டி அவர்களை கடவுளாக வழிபடலாம் வாருங்கள் ....
பதிலளிநீக்கு