இந்தியாவில் பிறந்த பின் இந்தியனாக இல்லாமல் வேறு எப்படி இருக்கமுடியும்? நான் இந்தியன்தான் என்கிறீர்களா? உண்மைதான். இந்தியாவில் பிறந்ததால் இந்தியனாக இருக்கிறோம். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு நம் நாட்டின் பொருளாதாரம் பற்றி தெரியும்? பண வீக்கம் பற்றி தெரியுமா? பணம் எப்படி வீங்கும் என்று அப்பாவித் தனமாக கேட்கும் இந்தியர்களே அதிகம்.
பண வீக்கம் என்றால் என்ன?
உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. அதில் நீங்கள் வாங்கும் பொருளின் மதிப்பு 80 ரூபாய் என்றால், அதாவது 100 ரூபாயின் மதிப்பு உண்மையில் 80 ரூபாய் என்பதுதான் பணவீக்கம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் சுலபமாகப் புரிய வேண்டுமானால் ஒரு காலத்தில் 100 ரூபாயில் நீங்கள் வாங்கிய பொருட்களை இப்போது அதே விலையில் வாங்க முடியாது. 50 வருடங்களுக்கு முன் தங்கம் ஒரு பவுன் 100 ரூபாய். இப்போது? பொருட்களின் விலை ஏறுவதும் பண வீக்கத்தின் அறிகுறிதான்.
ஒரு நாட்டின் நிஜமான சுதந்திரம் என்பது அரசியல் ரீதியான சுதந்திரம் அல்ல. பொருளாதார முன்னேற்றம் தான் மிக மிக அவசியம்.
ஒரு வருடத்திற்கு முன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாய் 39தான். இன்றைய மதிப்பு ரூபாய் 52 – 15. அமெரிக்காவிலிருக்கும் இந்தியர்கள் தாங்கள் சம்பளமாக வாங்கும் டாலரை 52 . 15 ஆல் பெருக்கிப் பார்த்து சந்தோஷப்படலாம். ஆனால்,இந்த புள்ளி விவரம் எதைக் காட்டுகிறது? நம் நாட்டின் பொருளாதாரம் சரிகிறது என்பதைத்தான். பல ஆசிய நாடுகளைப் போல நம் நாடும் ஒரு பொருளாதார நெருக்கடியை நோக்கிப் போய்கொண்டிருக்கிறது. நாம் உடனடியாக ஏதாவது செய்யாவிட்டால் இந்தப் பொருளாதாரச் சரிவை நேர் செய்ய முடியாது.
வெளி நாட்டில் தயாராகும் சோப்புகள், அழகு சாதனப் பொருட்கள், குளிர் பானங்கள், தின்பண்டங்கள், போன்றவற்றை நாம் பயன்படுத்துவதால் சுமார் 30,000 கோடி ரூபாய் அந்நிய செலாவணி நம் நாட்டிலிருந்து அயல் நாடுகளுக்குப் போய்க்கொண்டிருக்கிறது.
மிகக் குறைந்த விலையில் தயாராகும் இப்பொருட்கள் நம் நாட்டில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனால் வரும் லாபத்தில் பெரும் பங்கு வெளிநாட்டிற்கு போகிறது. இதனால் நம் பொருளாதாரம் வற்றி விடுகிறது.
ஏன் வெளி நாட்டுக் கம்பனிகள் இந்தியாவில் தாங்கள் கடையை விரிக்கிறார்கள்? நம் நாட்டில் முதலீடு செய்வது அவர்களுக்கு லாபகரமானது. குறைந்த சம்பளத்திற்கு, நிறைய நேரம் உழைக்கத் தயாராக இருக்கும் தொழிலாளிகள், அரசாங்கத்தால் கிடைக்கும் பல விதமான உதவிகள் இவற்றால் அவர்களது நாட்டில் செய்யப்படும் முதலீட்டை விட இங்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபத்தைப் பார்க்கலாம்.
இப்படிச் சொல்லுவதால், அந்நிய முதலீடு நம் நாட்டிற்கு வேண்டாம் என்றோ, வெளி நாட்டுப் பொருட்கள் நமக்கு வேண்டாம் என்றோ அர்த்தம் இல்லை. கட்டாயம் நமக்கு வெளிநாட்டு முதலீடு தேவை. அக்கம்பனிகளால் நமக்கு தொழில், வேலை வாய்ப்பு பெருகுகிறதே, அதனால் அயல் நாட்டு முதலீடு வேண்டாம் என்று சொல்லுவது தவறு. இந்த கம்பனிகள் நம் நாட்டில் இருக்கும் பொருட்களையும் தொழிலாளர்களையும் வைத்துக் கொண்டு தயார் செய்யும் பொருட்களை மற்ற வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால், நமக்கு அந்நிய செலாவணி கிடைக்கும். நம் நாட்டில் நம் ஆட்களை கொண்டு தயார் செய்த பொருட்களை நமக்கே அதிக விலையில் விற்கும் போதுதான் வருத்தம் ஏற்படுகிறது. 6 ரூபாயில் தயாரிக்கப்படும் குளிர் பானம் 30 ரூபாய்க்கு விற்கப்படும் பொது எத்தனை லாபம் தயாரிப்பவர்களுக்கு!
இவர்களால் பிரம்மாண்டமாக விளம்பரம் செய்யப் படும் இந்த குளிர் பானங்கள் பட்டி தொட்டிகளிலும், கிராமங்களிலும் கிடைக்கின்றன. இவர்களால் ஏற்படும் வியாபாரப் போட்டியை சமாளிக்க முடியாமல் உள்நாட்டு குளிர் பானங்கள் தயாரிப்புக் கம்பனிகள் பல மூடப்பட்டு விட்டன.
நம்மைப் போன்ற சாதாரணக் குடிமக்கள் என்ன செய்யமுடியும் என்று தோன்றுகிறதா? நிறையவே செய்யமுடியும்.
நம் நாட்டில் தயாராகும் பொருட்களை வாங்க வேண்டும். குளிர் பானங்களிலிருந்து ஆரம்பித்து அழகு சாதனங்கள், கைபேசி வரை, ஷேவிங் கிரீமிலிருந்து குளியல் சோப் வரை, குழந்தைகளின் உணவுப் பொருட்கள், பவுடர்கள், நாப்கின்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
நம் உணவு வகைகளான இட்லி, தோசை, வடை ஆகியவற்றை சாப்பிடலாம். இந்தியர்களில் 5 பேரில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது; 4 பேர்களில் ஒருவர் கூடுதலான எடையுடன் இருக்கிறார் என்றும் சில நாட்களுக்கு முன் செய்தித் தாள்களில் வந்திருந்தது. இதற்கான காரணம் நமக்குப் பழக்கமில்லாத உணவுவகைகளை உண்ணத் தொடங்கியதுதான். சுமார் 10 – 15 வருடங்களாகவே வெளியில் சாப்பிடும் வழக்கம் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக வரும் இந்த நோய்களை life style diseases என்கிறார்கள். நம் தாத்தாக்கள், பாட்டிகள் நம்மை விட ஆரோக்கியமாக இருந்ததற்குக் காரணம் வீட்டில் தயாரிக்கப் பட்ட பொருட்களை மட்டுமே சாப்பிட்டு வந்ததுதான்.
இப்படிச் சொல்லுவதால் பிட்சா, பர்கர் சாப்பிடுவதை ஒரேயடியாக விட்டுவிடுங்கள் என்று சொல்லவில்லை. ஒரு அளவிற்கு வைத்துக் கொள்ளுங்கள். வீட்டில் சாப்பிடுவதும், நம் நாட்டு உணவு வகைகளை சாப்பிடுவதும் நமக்கு மட்டுமல்ல; நம் நாட்டிற்கும் நல்லது. நம் குழந்தைகளுக்கும் நல்ல உணவுப் பழக்கங்களை சொல்லிக் கொடுப்போம்.
‘சிறு துளி பெரு வெள்ளம்’ – இல்லையா? நாம் எடுக்கும் சிறு சிறு முயற்சியும் நம் நாட்டைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுவோம். எத்தனையோ இந்தியர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடு பட்டனர். சுதந்திர இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தைக் காப்பது நம் கையில். காப்பாற்றுவோமா?
பணம் பணம் என அலைந்து முடிவில் எல்லாம் வீண்...
பதிலளிநீக்குநல்லதொரு கருத்துக்களுக்கு, விளக்கங்களுக்கு நன்றி அம்மா...
வாங்க தனபாலன்.
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
நாம் எடுக்கும் சிறு சிறு முயற்சியும் நம் நாட்டைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுவோம்.
பதிலளிநீக்குநல்ல விழிப்புணர்வுப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ஒவ்வொரு சூப்பர் மார்க்கெட்டுகளிலும் இந்தியப்பொருள்கள் எவை ??
அயல்நாட்டுப்பொருள்கள் எவை என விளம்பரம் த்ந்தால் பயனளிக்கும்
அறியாமை அகலும் ..
பொருளாதாரம் மேலும் சரியாது ...
வாங்க இராஜராஜேஸ்வரி!
நீக்குவருகைக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!
// பண வீக்கம் என்றால் என்ன? …… … 100 ரூபாயின் மதிப்பு உண்மையில் 80 ரூபாய் என்பதுதான் பணவீக்கம் என்று சொல்லப்படுகிறது. இன்னும் சுலபமாகப் புரிய வேண்டுமானால் ஒரு காலத்தில் 100 ரூபாயில் நீங்கள் வாங்கிய பொருட்களை இப்போது அதே விலையில் வாங்க முடியாது.//
பதிலளிநீக்குபணவீக்கம் குறித்து எளிமையான புரியும்படியான விளக்கம்.
இந்த விளக்கத்திற்கு நான் எனது மாணவன் ஒருவனுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். மங்கோலியாவிலிருந்து ஆங்கிலம் கற்க வந்திருந்தான். ஆச்சர்யப்படும் படி ஆங்கிலம் கற்றதுடன் எந்த புரியாத விஷயம் ஆக இருந்தாலும் எளிமையாக விளக்கமும் கொடுக்க கற்றுக் கொண்டான். அவன் கொடுத்த விளக்கம் தான் இது. உங்கள் பாராட்டுக்கள் அவனுக்கே!
நீக்குவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
அருமையான கட்டுரை. நல்லதொரு அலசல். நாம் அனைவருமே இந்தியனாக இருக்க முயற்ச்சிப்போம்.
பதிலளிநீக்கு//நாம் எடுக்கும் சிறு சிறு முயற்சியும் நம் நாட்டைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுவ.
OK ததாஸ்து.
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி கோபு ஸார்!
நீக்குஅருமையான விழிப்புணர்வு பதிவு.
பதிலளிநீக்குவெளிநாட்டுப்பொருட்கள் மோகம் எனக்கு அதிகம் இருக்குப்பா. இந்தியப்பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கறேன். இந்திய (குறிப்பாக இட்லி தோசை, புட்டு, ஆப்பம், சாம்பார் ரசம் மோர் என்ற தென்னிந்திய )உணவுகளையும்தான் தான் நியூஸி வீட்டில் விழுங்கியாறது.
அதான் சொன்னேனே வெளிநாட்டு பொருட்கள் பிடிக்குதுன்னு:-)
உங்கள் வெளிநாட்டு உணவு பற்று ரொம்பவும் வியப்பாக இருக்கிறது துளசி!
நீக்குஉங்களுக்கு வெளிநாடு என்பது இந்தியா ஆனால் இந்தியாவில் உட்கார்ந்து கொண்டு பீட்ஸா, பர்கர் சாப்பிடுகிறார்களே! அதனால் வரும் Life style disease - களையும் அனுபவிக்கிறார்களே என்று வருத்தமாக இருக்கிறது.
உங்கள் இந்தியப் பற்று இன்று போல என்றும் வாழ்க!
பொருளாதாரப் பட்டதாரியான நான் உங்களின் பணவீ்க்கம் பற்றிய விளக்கத்தையும், சிந்தனையைத் தூண்டிய இந்தப் பகிர்வையும் மிக ரசித்தேன். வெளிநாட்டுப் பொருட்களை அவசியம் தவிர்த்திடத்தான் வேண்டும் என்று முடிந்தவரை கடைப்பிடித்து வருவதை உங்களின் கட்டுரை மேலும் அதிகமாக்கியுள்ளது. நல்லதொரு பகிர்விற்கு மகிழ்வுடன் நன்றி!
பதிலளிநீக்குவாங்க கணேஷ்!
நீக்குபொருளாதாரப் பட்டதாரியான உங்களுக்கு இந்தக் கட்டுரை மிகவும் பிடித்தது என்று அறிய சந்தோஷம்.
நாம் எல்லோருமே கொஞ்சம் சிந்தித்து செயல் படலாம், இல்லையா?
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
‘சிறு துளி பெரு வெள்ளம்’ – இல்லையா? நாம் எடுக்கும் சிறு சிறு முயற்சியும் நம் நாட்டைக் காப்பாற்றும் என்பதை நினைவில் கொள்ளுவோம். எத்தனையோ இந்தியர்கள் நம் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடு பட்டனர். சுதந்திர இந்தியாவின் பொருளாதார சுதந்திரத்தைக் காப்பது நம் கையில். காப்பாற்றுவோமா?//
பதிலளிநீக்குஉண்மைதான் நம் கையில் தான் இருக்கிறது.
நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.
வாங்க கோமதி!
நீக்குஇந்தியா சரியில்லை என்று சொல்லுகிறோமே தவிர நம் கடமை என்ன என்று யாருமே சிந்திப்பது இல்லை. வருத்தமான விஷயம் இல்லையா இது?
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
ஒருவருக்கொருவர் இப்படி விழிப்புடன் இருந்தால் பண வீக்கம் என்ன எதையும் விரட்டலாம் நல்ல பகிர்வுங்க.
பதிலளிநீக்குபல துளி பெரு வெள்ளம் என்பது மாறி சிறுதுளி பெரு வெள்ளம் என்று ஆகிவிட்டது.
பதிலளிநீக்கு