நீங்கள் உங்கள் 'பொன்னான பிறந்த' (Golden Birthday) நாளைக் கொண்டாடி இருக்கிறீர்களா?
'பொன்னான பிறந்த நாளா?' என்று வியப்பவர்களுக்கு: உங்கள் பிறந்த தேதியும், உங்கள் வயதும் ஒன்றாக இருந்தால் (அதாவது 27 ஆம் தேதி உங்கள் 27 வது பிறந்தநாள் வந்தால் அதுதான் உங்களது 'பொன்னான பிறந்த நாள்'. 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்களது 53 வது பிறந்த நாளை 'பொன்னான பிறந்த நாளா' கக் கொண்டாடலாம்.
சரி லீப் வருடத்தில் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்தவர்கள் எப்போது தங்களது 'பொன்னான பிறந்த நாளை' கொண்டாடுவார்கள்? யோசியுங்கள்..... விடை கடைசியில்.......
ஒரு வருடத்தின் எண்களை மிகுதி இல்லாமல் 4 ஆல் வகுக்க முடிந்தால் அது தான் லீப் வருடம் என்று தெரியும்.தெரியாத விஷயம்: நூற்றாண்டுகள் வரும்போது அவை 400 ஆல் மிகுதி இல்லாமல் வகுக்கப் பட வேண்டும் என்பது!
லீப் வருடமும் பலவிதமான காலண்டர்களும்:
பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள் அதாவது 365 1/4 நாட்கள். எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர்.
- முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும்.
- நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.
- ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753 க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொதுமக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களைஇழந்து விட்டதாக நினைத்தனர்!
- 1930 களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக ஞாயிறு விடுமுறை) இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில்வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால்,இந்த முறை, அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.
பழங்காலத்தில் லீப் வருடம்:
- முற்காலத்தில் ஒரு பெண் தன் மனதுக்குப் பிடித்தவனை தேர்ந்தெடுக்க லீப் வருடமே சிறந்தது என்று கருதப் பட்டது. லீப் வருடத்தில் ஒரு பெண் தன் காதலைச் சொல்லலாம் என்று 5 ஆம் நூற்றாண்டில் அயர்லாந்து நாட்டில் ஒரு வழக்கம் இருந்ததாம். 13 ஆம் நூற்றாண்டில் இதை அரசு பூர்வ சட்டமாக மாற்றியவர் ஸ்காட்லாந்து ராணி மார்கரெட்.
- ஒரு பெண் லீப் வருடத்தில் தன் காதலை சொல்லி அதை ஏற்க மறுக்கும் ஆண் மகன் அவளுக்கு புதிதாக பட்டு உடையும் ஒரு ஜோடி கையுறையும் கொடுக்க வேண்டும் என்ற வழக்கமும் இருந்ததாம்.
- சில நாடுகளில் லீப் வருடம் அமங்கலமான வருடமாக கருதப்பட்டது. ஸ்காட்லாந்து நாட்டில் லீப் வருடத்தில் பிறக்கும் குழந்தை அதிர்ஷ்டம் இல்லாத குழந்தையாகக் கருதப் பட்டது. கிரேக்க நாட்டில் இன்னும் ஒரு படி மேலே போய் லீப் வருடத்தில் கல்யாணம் செய்து கொள்ளுவதையே தவிர்த்தனர்.
லீப் வருடமும் சினிமாவும்:
- அயர்லாந்து நாட்டில் பழைய காலத்தில் இருந்த வழக்கத்தை அடிப்படையாக வைத்து 2010 ஆம் ஆண்டு 'லீப் இயர்' (Leap Year) என்ற நகைச்சுவைப் படம் வெளியானது. தன் மனதுக்குப் பிடித்தவனை 'ப்ரொபோஸ் ' செய்ய அயர்லாந்துக்கு பிரயாணம் செய்யும் ஒரு பெண்ணின் கதையை நகைச்சுவையுடன் விவரிக்கிறது இப்படம்.
- 19 ஆம் நூற்றாண்டு வெளி வந்த 'The Pirates of Pinzance" என்கிற நகைச் சுவை இசை நாடகம், கப்பற் கொள்ளைக்காரனான ஒரு இளைஞன் பற்றியது. வேலைக்குச் சேர்ந்தவுடன் அவனது பயிற்சி பருவம் (apprenticeship) அவனது 21 வயது வரை என்று நிர்ணயிக்கப் படுகிறது. முதலில் மகிழ்ச்சி அடையும் அவன் தன் பிறந்த நாள் பிப்ரவரி 29 என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைகிறான்! 84 வயதில் தான் அவனது 21 வது பிறந்த நாள் வரும்!
சராசரியாக 1461 குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டுமே இந்த லீப் வருடம் பிப்ரவரி 29 ஆம் தேதி பிறக்கும் பாக்கியத்தைப் பெறுகிறது.
இக்குழந்தைகள் 'Leaplings' என்று அழைக்கப் படுகின்றனர். இவர்கள் ஒவ்வொரு வருடமும் தங்கள் பிறந்தநாளின் கால் பகுதியைத்தான் கொண்டாடுகிறார்கள். பிறந்த தேதி வராத வருடங்களில் பிப்ரவரி 28 அல்லது மார்ச் 1 ஆம் தேதி தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றார்.
- பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்த நம்மூர் பிரபலங்கள்: மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் நடனக் கலைஞா் ருக்மிணி தேவி.
- உலகப் புகழ் பெற்ற சூப்பர் மேன் பிறந்தது இதே பிப்ரவரி 29. இவரது 50 வது பிறந்த நாளை 'டைம்ஸ்' பத்திரிக்கை 1988 ஆம் ஆண்டு தனது அட்டைப் படத்தில் சூப்பர் மேனைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு கொண்டாடியது.
- ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மேனியா பிரதமர் சர் ஜேம்ஸ் வில்சன் பிறந்தது, இறந்தது இரண்டுமே பிப்ரவரி 29 ஆம் தேதிதான்!
2012 லீப் வருடம் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்த ஆண்டின் தெரியாத விசேஷங்கள்:
- இந்த ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் Rare Disease Day யாக கடை பிடிக்க உள்ளனர். குணப்படுத்த முடியாத, அரிதான, நோய்களை 'rare disease' என்கிறார்கள். இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.
- அமெரிக்காவின் டிஸ்னி லாண்ட் இந்த வருடத்தில் வரும் ஒரு அதிகப் படியான நாளைக் கொண்டாட 29 ஆம் தேதி 24 மணி நேரமும் திறந்திருக்கும்.
சரி, இப்போது முதலில் கேட்ட கேள்விக்கு பதில் பார்ப்போமா? பிப்ரவரி 29 இல் பிறந்தவர்கள் தங்கள் பொன்னான பிறந்தநாளை தங்களது 116 வது வயதில் கொண்டாடுவார்கள்!!!!
குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய பல சுவையான தகவல்களை அறியச் செய்தமைக்கு நன்றி அம்மா...
பதிலளிநீக்குஉங்களை மீண்டும் பின்னூட்டத்தில் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி, தனபாலன்.
பதிலளிநீக்குஉங்கள் பின்னூட்டம் இல்லாமல் பதிவுகள் ரொம்பவும் 'டல்'லாக இருந்தன.
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
i am a leaplings
பதிலளிநீக்குஓ! என்னுடைய லீப் வருடப் பதிவுக்கு ஒரு லீப்லிங்கின் வருகை மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கிறது.
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஜான்!
அப்பப்பா பல தடவை வாசித்து மனதில் பதிக்க வேண்டுமுங்க.
பதிலளிநீக்குரெம்ப நிறைய விடயம் இருக்கு.
மிக்க நன்றி சிஸ்.
தமிழ் மணத்தில் மேய்ந்தேன், எனது ஆக்கம் போட்டிட்டு.
இதைக் கண்டு பாய்ந்து வந்தேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாருங்கள் வேதா!
நீக்குபல புத்தகங்களில் வாசித்ததை தொகுத்து எழுதி இருக்கிறேன்.
நன்றி பாய்ந்து வந்து படித்ததற்கு!
அறியாத பல அரிய தகவல்களை அருமையாக
பதிலளிநீக்குசுவாரஸ்யமாக அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்
வாருங்கள் ரமணி!
நீக்குவருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி!
லீப் வருடம் பற்றிய சுவையான அரிய தகவல்கள் அள்ளி கொடுத்துவிட்டீர்கள் ரஞ்சனி.
பதிலளிநீக்குஇந்த ஆண்டு பிப்ரவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் Rare Disease Day யாக கடை பிடிக்க உள்ளனர். குணப்படுத்த முடியாத, அரிதான, நோய்களை 'rare disease' என்கிறார்கள். இந்நோய்களைப் பற்றிய விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 29 ஆம் தேதி அறிவிக்கப் பட்டுள்ளது.//
குணப்படுத்த முடியாத வியாதிகளே இல்லை என்னும் நிலை வரட்டும். நோய்களைபற்றி நன்கு ஆராய்ந்து அது மீண்டும் வராமல் தடுக்க மருந்துகள் கிடைக்க வாழ்த்துக்கள்.
நல்ல பதிவை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
வாருங்கள் கோமதி!
பதிலளிநீக்குஉங்கள் நம்பிக்கை பலிக்கட்டும் - நோய்கள் இல்லா நிலை வரட்டும்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
லீப் வருடத்தின் சிறப்புகள் பற்றி அழகானதோர் அலசல். 29.02.2016 அன்று இதையே மீள் பதிவாக வெளியிடுங்கள், மேடம். பொருத்தமாக இருக்கும். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாங்கோ கோபு ஸார்! ரொம்பவும் தாமதமாக பதில் எழுதுகிறேன். மன்னிக்கவும். நிச்சயம் நீங்கள் சொல்வதுபோல மீள் பதிவு செய்துவிடுகிறேன்.
நீக்குநன்றி!
கணக்கு வராதுன்னு சொல்லிட்டு இவ்ளோ கணக்குப்போட்டு எழுதியிருக்கீங்க.நிறைய தகவல்களை சுவைபடத் தொகுத்துக் கொடுத்திருக்கீங்க.நன்றி.
பதிலளிநீக்குபள்ளிக் கூடத்துல தான் கணக்கு வராது!
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சித்ரா!
// 'பொன்னான பிறந்த நாளா?' என்று வியப்பவர்களுக்கு: உங்கள் பிறந்த தேதியும், உங்கள் வயதும் ஒன்றாக இருந்தால் (அதாவது 27 ஆம் தேதி உங்கள் 27 வது பிறந்தநாள் வந்தால் அதுதான் உங்களது 'பொன்னான பிறந்த நாள்'. 1953 ஆம் ஆண்டில் பிறந்தவர்கள் தங்களது 53 வது பிறந்த நாளை 'பொன்னான பிறந்த நாளா' கக் கொண்டாடலாம் .//
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி! நான் இந்த ஜென்மத்தில் எனது பொன்னான பிறந்தநாளைக் கொண்டாட வாய்ப்பே இல்லை.
எனக்கும் இப்படித்தான் ஆகிவிட்டது. இந்தக் கட்டுரை எழுதியபின் தான் இப்படி ஒரு பொன்னான பிறந்தநாள் இருப்பதே தெரியும்!
நீக்குவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
லீப் வருடம் பற்றிய நிறைய சுவாரசியமான தகவல்கள் தெரிந்து கொண்டேன், மேடம்.மிகவும் சிறப்பான பதிவு.
பதிலளிநீக்குநன்றி ராம்வி!
நீக்குஅனைவரும் அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய
பதிலளிநீக்குதகவல்களுடன் கூடிய பதிவுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்களுக்கு நன்றி திரு சேக்கனா!
நீக்குஅருமையான தகவல்கள் பகிர்வுகள்..பாராட்டுக்கள்...
பதிலளிநீக்குவருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி!
பதிலளிநீக்கு