ஆரோக்கியம் என்பது எல்லோருக்குமே அவசியம் என்றாலும், வயது ஏற ஏற சில விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் முதியவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை மிகச் சிறந்த முறையில் பாதுகாக்கலாம்.
- தொலைபேசியில் பேசும்போது இடது காதில் ரிசீவரை வைத்துக் கொண்டு பேசவும்.
- இரண்டு வேளை காப்பி அருந்த வேண்டாம்.
- குளிர்ந்த தண்ணீரில் (ப்ரிட்ஜ் தண்ணீர்) மாத்திரைகளை சாப்பிடாதீர்கள்.
- மாலை 5 மணிக்கு மேல் கனமான ஆகாரம் வேண்டாம்.
- எண்ணெய் பதார்த்தங்களை கூடுமானவரையில் தவிர்க்கவும்.
- காலை வேளைகளில் நீர் அதிகம் அருந்தவும். இரவு வேளைகளில் குறைவாக குடியுங்கள்.
- ஹெட் போன், இயர் போன் அதிக நேரம் பயன் படுத்த வேண்டாம்.
- இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை தூங்குவதை பழக்கப் படுத்திக் கொள்ளவும்.
- மருந்து சாப்பிட்டவுடன் படுக்க வேண்டாம்.
- கைபேசி சார்ஜ் ஆகும்போது அருகில் செல்ல வேண்டாம். பாட்டரி மிகவும் குறைந்து - அதாவது கடைசிக் கோட்டில் இருக்கும்போது பேச வேண்டாம். ஏனெனில், கைபேசியிலிருந்து வரும் கதிர் வீச்சு 100 மடங்கு அதிகம் இருக்கும். சார்ஜ் செய்யும்போது கைபேசியை பயன்படுத்த வேண்டாம்.
- காரட் + இஞ்சி + ஆப்பிள் = நமது உடல் உறுப்புகளை சுத்தம் செய்து வலுப் பெறச் செய்கிறது.
- ஆப்பிள் + வெள்ளரிக் காய் + செலெரி கீரை = கான்சர் வருவதை தடுக்கிறது; வயிறு கெடாமல் இருக்கவும் தலை வலி வாராமல் பாதுகாக்கவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் நல்லது.
- தக்காளி + காரட் + ஆப்பிள் = சருமப் பாதுகாப்பிற்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கவும் நல்லது.
- பாகற்காய் + ஆப்பிள் + பால் = உடம்பின் உள்சூட்டைக் குறைக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது.
- ஆரஞ்சு + இஞ்சி + வெள்ளரிக் காய் = சருமம் உலராமலும் வறண்டு போகாமலும் காக்கிறது.
- அ ன்னாசி + ஆப்பிள் + தர்பூசணி = உடலில் சேரும் அதிகப்படி உப்பை நீக்கி சிறுநீரகத்தைக் காக்கிறது.
- ஆப்பிள் + வெள்ளைக் காய் + கிவி பழம் = சருமத்தைக் காக்கிறது.
- பேரிப்பழம் + வாழைப் பழம் = இரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப் படுத்துகிறது.
- காரட் + ஆப்பிள் + பேரி + மாம்பழம் = உடல் உஷ்ணத்தை குறைக்கிறது; உடலின் நச்சுத் தன்மையை போக்குகிறது; இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
- தேன் + திராட்சை + தர்பூசணி + பால் = வைட்டமின் C + B2 இவற்றில் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாகிறது.
- பப்பாளி + அன்னாசி + பால் = விட்டமின்கள் C, E, மற்றும் இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால் சருமப் பளபளப்புக்கும் உடலின் வளர் சிதை மாற்றத்திற்கும் உதவும்.
- வாழைப் பழம் + அன்னாசி + பால் = உடலுக்குத் தேவையான போஷாக்கைக் கொடுக்கின்றன. மலச் சிக்கல் வராமல் பாது காக்கும்.
பொதுவான குறிப்புகள்:
காலை வேளைகளில் தவறாமல் வாக்கிங் போவது உடலை நாள் முழுதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
வேளை தவறாமல் மருந்து மாத்திரைகளை சாப்பிடவும். மாதம் ஒருமுறையோ அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறையோ மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எப்போதும் கைவசம் மருந்து மாத்திரைகளை வைத்திருங்கள். மருத்துவரின் அனுமதி இல்லாமல் நீங்களாகவே ஒருபோதும் மாத்திரைகளை சாப்பிட வேண்டாம்.
வெளியில் போகும்போது எங்கு போகிறீர்கள், எப்போது வருவீர்கள் என்று சொல்லிவிட்டுப் போகவும். கைபேசியை நினைவாக எடுத்துப் போகவும். போக வேண்டிய இடத்திற்குப் போனபின் பத்திரமாக போய் சேர்ந்ததை உங்கள் வீட்டிற்குத் தெரியப் படுத்துங்கள். அதேபோல உங்கள் வீட்டிற்குத் திரும்பியபின், நண்பருக்கோ, உறவினருக்கோ வீட்டிற்கு வந்து சேர்ந்த விவரத்தை சொல்லுங்கள். இந்தப் பழக்கம் பல அனாவசிய பயங்களைப் போக்கும்.
உங்களுக்கென்று ஒரு பொழுதுபோக்கு மிகவும் அவசியம். டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு படிப்பது, வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டுக்களை விளையாடுவது, குறுக்கெழுத்துப் போட்டி, கதை எழுதுவது, பேரன் பேத்திகளுடன் விளையாடுவது என்று சந்தோஷமாக பொழுதைக் கழியுங்கள்.
நண்பர்களுடன் வெளியில் போவது, குடும்பத்துடன் மாதம் ஒரு நாள் வெளியில் சாப்பிடப் போவது இவையெல்லாம் உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.
வீட்டில் சின்னச் சின்ன வேலைகளை செய்து தரலாம். சிறு வயதில் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தும் முடியாமல் போனவற்றை இப்போது மனமும் ஆரோக்கியமும் இருந்தால் கற்றுக் கொள்ளலாம். சுற்றலாத் தளங்களுக்கோ, கோவில்களுக்கோ போய் வரலாம்.
மனதை அமைதியாக வைத்திருக்கப் பழகுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் இருப்பவர்களுக்கும் மன அமைதியைக் கொடுக்கும். அலுவலகத்திற்கு போனபோது இருந்தது போல வாழ்க்கை இப்போது இருக்காது. மாற்றத்திற்கு உங்களை தயார் செய்து கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகள் விளையாடும் போது ரசிக்க உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. இப்போது பேரக் குழந்தைகளின் விளையாட்டை ரசியுங்கள். அவர்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுங்கள்; கதை சொல்லுங்கள். ஒய்வு பெற்றபின் வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
உங்கள் ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். வீட்டில் பெரியவர்கள் இருப்பது ஒரு பெரிய பாக்கியம். பெரியவர்கள் ஆரோக்கியமாகவும் இருந்து விட்டால் குடும்பத்தில் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
உங்கள் எலும்புகளின் வயது என்ன?
அனைவருக்குமே ஏற்ற குறிப்புகள் அம்மா... எலும்புகளின் வயதை அறிய செல்கிறேன்...
பதிலளிநீக்குநன்றி...
வாருங்கள் தனபாலன். அறிந்து வந்தீர்களா?
நீக்குநன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
எல்லோருக்கும் உதவும் பயனுள்ள குறிப்புகள். உங்கள் கட்டுரையை தமிழ்மணத்தில் இணைத்துள்ளேன்.
பதிலளிநீக்குவாருங்கள் இளங்கோ. தமிழ் மணத்தில் இணைத்ததற்கு நன்றி!
நீக்குரொம்ப அருமையான அவசியமான பதிவு.
பதிலளிநீக்குராத்தூக்கம்தான் வர்றதில்லை. மற்றபடி ஆல் ஈஸ் வெல்:-)))
வாருங்கள் துளசி!
நீக்குநிறைய பேருக்கு ராத்தூக்கம் வருவது இல்லை. ஆல் ஈஸ் வெல் - கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
முதியவர்களுக்கு மட்டுமில்லாது எல்லோருக்கும் உபயோகமான குறிப்புகள்.நன்றி பகிர்வுக்கு.
பதிலளிநீக்குவாருங்கள் ரமா!
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
மிகவும் பயனுள்ள ஆரோக்யக்குறிப்புகள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபதிவு எழுதியவர் இவற்றையெல்லாம் அப்படியே கடைபிடித்து மிகுந்த ஆரோக்யத்துடன் இருக்க அன்பான இனிய வாழ்த்துகள்.
வாங்கோ கோபு ஸார்!
நீக்குபதிவைப் படித்து இனிய அன்பான வாழ்த்துகளை தெரிவித்தவரும் இவற்றைக் கடைப்பிடித்து ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுகோள்!
இது எப்படி இருக்கு?
பெரியவர்கள் ஆரோக்கியமாகவும் இருந்து விட்டால் குடும்பத்தில் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
பதிலளிநீக்குஅருமையான பயனுள்ள பகிர்வுகள்..
பொதுவாக பெரியவர்கள் எந்த ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்வதில்லை ..மற்றவர்களுக்குச்சொல்வதோடு சரி ..
ஊருக்குமட்டுமே உபதேசம் செய்வார்கள் என்பது கண்கூடு ....
அவர்களுக்கு தாங்கள் இன்னும் இளமையாகவே இருப்பதாக நினைப்பு. என்ன செய்வது? முதுமையை சரியாக ஏற்பவர்கள் சிலரே. அதனால் தான் முதுமையை இரண்டாவது குழந்தைப் பருவம் என்கிறார்களோ?
நீக்குநன்றி இராஜராஜேஸ்வரி!
அருமையான அறிவுரைகள். கடைபிடித்தால் இனிமையான வாழ்வு நிச்சயம்...
பதிலளிநீக்குகடைபிடிக்க வேணுமே! அங்குதான் சிக்கல்கள் ஆரம்பம்!
நீக்குநன்றி ஆதி!
நமக்குநாமே திட்டம்போல நல்லா இருக்கு .
பதிலளிநீக்குவாருங்கள் கவியாழி! வயது கூடுகிறது என்பதை உணர்ந்து திட்டம் போட்டு நடந்தால் எல்லோருக்குமே நல்லது.
நீக்குநன்றி!
பயனுள்ள தகவல்கள்..
பதிலளிநீக்குவாருங்கள் சாந்தி! உங்கள் வருகை மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. நன்றி!
நீக்குபாதி முடியும்.பாதி கஷ்டம். ஆனாலும் ஆரோக்கியம் தேவை என்றால் கட்டாயம் கடைப் பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.
பதிலளிநீக்குமுடிந்ததை செய்தால் போதும். கொஞ்சமாவது பலன் கிட்டும். வயசாச்சுன்னு சொன்னாலே கோவம் வரதே பலருக்கு.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஸ்ரீராம்!
உங்கள் குழந்தைகள் விளையாடும் போது ரசிக்க உங்களுக்கு நேரம் இருந்திருக்காது. இப்போது பேரக் குழந்தைகளின் விளையாட்டை ரசியுங்கள். அவர்களுக்கு பாட்டு சொல்லிக் கொடுங்கள்; கதை சொல்லுங்கள். ஒய்வு பெற்றபின் வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.//
பதிலளிநீக்குஆம் ஆம, உண்மை .
வாழ்க்கையை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளவது தான் மிக முக்கியம்.
தினம் ஒரு வலி சொல்லி பழகி விட்டால் உடல் நோய்க்கு இடம் கொடுத்துவிடும்.
நல்ல பதிவு.
வயதானவர்கள் இதன்படி நடந்து கொண்டால்,சிறுசுகள் பொறாமைபடும்..
பதிலளிநீக்குஅந்த அளவுக்கு உற்சாகமாக வாழலாம்...நன்றி நன்றி