காதல் என்பது இரு நெஞ்சங்கள் அன்பால் இணைந்து, அன்பைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு உணர்வு. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுதல் என்பது இதன் முக்கிய அங்கம். ஒருவரையொருவர் அப்படியே குறை நிறைகளுடன் ஏற்றுக் கொள்ளுதல் அடுத்த கட்டம். குறைகளை தன் மனம் கவர்ந்தவளுக்காக அல்லது ‘வனுக்காக’ மாற்றிக் கொள்ள முயலலாம். அல்லது நிறைவை நிறைவாக நினைத்துக் குறைகளை மன்னிக்கவும் மறக்கவும் செய்யலாம். ஏதானாலும் உனக்காக நான், எனக்காக நீ, என்று வாழ்வாங்கு வாழலாம்.
நம் இதிகாச புராணங்கள் பல காதல் கதைகளைச் சொல்லுகின்றன. ஸ்ரீ ராமாயணத்தில் பட்டாபிஷேக காட்சி. பட்டாபிஷேகம் நல்லபடியாக நடந்தேறியது. எல்லோருக்கும் பரிசுகள் கொடுத்தாகிவிட்டது; அனுமனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று சீதைக்கு அவா. இராமபிரானைப் பற்றிய செய்தி கொண்டு வந்து சீதையின் ஆருயிர் காத்த உத்தமன் அல்லவா அனுமன்? சிந்தனை வயப்பட்டவளாய் இராமனைப் பார்க்கிறாள் சீதை; இராமனும் கண்களாலேயே உத்திரவு கொடுக்கிறான். தன் கழுத்தில் இருந்த மணி மாலையைக் கழற்றி அனுமனின் கையில் கொடுக்கிறாள் சீதை. பார்வையிலேயே ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் பக்குவம் இராமனுக்கும் சீதைக்கும் இருந்தது.
மலரின் மணம் போல, தேனின் சுவை போல இருக்க வேண்டும் காதல். ஆனால் இப்போது நாம் கேள்விப் படும் காதல் என்பதன் பொருளே வேறு மாதிரி ஆகிவிட்டது. இந்த நாளைப் பற்றி நினைக்கும்போது எனக்கு மறைந்த நடிகர் சந்திர பாபுவின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.
“காதல் என்பது எதுவரை? கல்யாணக் காலம் வரும்வரை...”
அவர் காலத்திலேயே இப்படி என்றால் இப்போது கேட்கவே வேண்டாம்!
“ஏங்க, காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை முதலிய படங்களை நீங்கள் பார்த்ததில்லையா?” என்று கேட்கிறீர்களா? அந்தப் படங்கள் என்னவோ வெற்றிப் படங்கள் தான்; மக்களும் கூட்டம்கூட்டமாக போய்ப் பார்த்தார்கள்; ஆனால் இப்படங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை எத்தனை பேர் பின்பற்றினார்கள்?
காதல், காதல், காதல், காதல் இல்லையேல், சாதல் என்றார் பாரதியார்.
மனிதனின் வாழ்வில் காதல் என்னும் அன்பு இல்லை என்றால் அவனது வாழ்வு அர்த்தம் இல்லாதது; கிட்டத்தட்ட உயிரில்லாதவனைப் போன்றவன் அவன் என்று இதற்கு நாம் பொருள் கொள்ளவேண்டும்.
ஆனால் பள்ளி செல்லும் சிறுவர் சிறுமியர் காதலிப்பதும் காதலில் தோல்வி என்றாலோ அல்லது பெற்றோர்கள் இதுபற்றி தெரிந்து கோபித்துக் கொண்டாலோ உடனே தூக்கில் தொங்குவதும், விஷம் குடித்து உயிரை விடுவதும்.... காதலைப் பற்றிய எண்ணமே மாறிவிடுகிறது, இல்லையா?
சரி இப்போது ஒரு கதை..
காதல் கதைதாங்க! ஒரு இணைய தளத்தில் (பி)படித்தது.
வெகு காலத்திற்கு முன், மகத தேசத்தில் அகல்யா என்றொரு அழகான பெண் இருந்தாள். அரசனுக்கு அவள் மேல் ஆசை. ஆனால் அவளுக்கோ இந்திரன் என்கிற இளைஞன் மேல் ஆசை; அவனுக்கும் அப்படியே. எத்தனையோ ரகசியாமாக வைத்திருந்தும் ஒரு நாள் அரசனுக்கு அவர்களின் காதல் தெரிந்து விடுகிறது. தனக்கு அகல்யா கிடைக்காத கோபத்தை அவர்கள் இருவரையும் தண்டிப்பதில் தீர்த்துக் கொண்டான்.
முதலில் அவர்கள் இருவரையும் பனிக் காலத்தில் எலும்புகளை உறைய வைக்கும் நீரில் தள்ளினான். காதலில் மூழ்கி இருந்த அவர்களுக்கு அது ஒரு பொருட்டாகவே இல்லை. மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தனர்.
“நீ எத்தனை கடுமையாக தண்டித்தாலும், நாங்கள் எங்களைப் பற்றிய நினைவுகளில் மூழ்கி இருப்பதால், உடல் துன்பம் பெரிதாகத் தெரியவில்லை”. என்றனர்.
கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் இருவரையும் போட்டான்; “எங்களைப் பற்றிய தியானத்தில் ஆழ்ந்து விட்டோம்; வலியை உணரவில்லை” என்றனர்.
யானையின் கால்களில் இருவரையும் கட்டி யானையை ஓட விட்டான். “இருவருக்கும் இடையே இருக்கும் ஈர்ப்பு, எல்லையில்லா ஆனந்தத்தை தருகிறது; உடல் துன்பம் பெரிதல்ல” என்றனர்.
சாட்டையால் அடித்தும் இரும்புக் கம்பிகளால் உடல் முழுவதும் துளைத்தும் இன்னும் எப்படி எப்படியோ துன்புறுத்தியும், அரசன் தான் அசந்து போனானே ஒழிய இளம் காதலர்கள் அயரவே இல்லை.
“நீ கொடுத்த தண்டனை எல்லாம் எங்கள் உடலைத்தான் பதம் பார்த்தன; எங்கள் காதலை அல்ல” என்று சொன்னார்கள்.
வேறு வழி தெரியாத அரசன் பரத முனிவரிடம் அந்தக் காதலர்களை அவரது சாபத்தால் அழியும்படி செய்தான். உடல்கள் தான் அழிந்ததே தவிர உள்ளமோ, ஆத்மாவோ அல்ல.
அகல்யாவும், இந்திரனும் முதலில் பின்னிப்பிணைந்த புழுக்களாக பிறந்தனர். பின்பு முத்தமிடும் மீன்களாகப் பிறவி எடுத்தனர். அடுத்து ஜோடிப் புறாக்களாக பிறந்து, வான் வெளியில் ஆனந்தமாய் பறந்து திரிந்தனர். அடுத்த பிறவியில் ஜோடி மான்களாய் பச்சைப் புல்வெளியில் பாடித் திரிந்தனர்.
கடைசியில் ஆணும் பெண்ணுமாய் இந்த பூவுலகில் வந்து பிறந்தனர்.
கதையின் நீதி என்ன?
மனம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்; உடல் அதன் வெளிப்பாடு; அவ்வளவு தான். இரண்டு மனங்கள் இணைந்துவிட்டால் யாராலும், மரணத்தாலும் கூட அவற்றை பிரிக்க முடியாது.
இரண்டு தனிநபர்கள் மனத்தால் இணைந்து இத்தனை துன்பங்களை தாங்கிக் கொள்ளமுடியும் என்றால், ஒரு நிமிடம் யோசியுங்கள் நீங்கள் உங்கள் மனத்தைக் கடவுளிடம் இணைத்து விட்டால் என்னதான் நடக்காது?
இப்படி ஒரு க்ளைமேக்ஸ் உடன் முடிகிறது இந்தக் காதல் கதை!
இந்தக் கதையில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா?
நீங்கள் என்ன புரிந்து கொள்ளுகிறீர்களோ, அது உங்கள் பாடு.... நான் எஸ்கேப்!
எனது இரண்டாவது எண்ணம் தளத்தில் காதல் கதை - 1
எனது இரண்டாவது எண்ணம் தளத்தில் காதல் கதை - 1
நல்லதொரு கதையுடன் அருமையாக சொல்லி விட்டீர்கள் அம்மா... இத்துடன் உங்களின் இன்னொரு தளத்தில் 'காதல் கதை – 1' {http://pullikkolam.wordpress.com/2013/02/08/காதல்-கதை-1/} பதிவையும் ஒரு எடுத்துக்காட்டாக (Link) தந்து இருந்தால், அதையும் இந்த தளத்தில் வருபவர்கள் படிப்பார்கள் என்பது என் கருத்து...
பதிலளிநீக்குநன்றி அம்மா...
ஆமாம் தனபாலன், எனக்கு அது தோன்றவே இல்லை. உடனே செய்கிறேன். யோசனைக்கு நன்றிங்க!
நீக்கு/மனம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்; உடல் அதன் வெளிப்பாடு; அவ்வளவு தான். இரண்டு மனங்கள் இணைந்துவிட்டால் யாராலும், மரணத்தாலும் கூட அவற்றை பிரிக்க முடியாது.
பதிலளிநீக்குஇரண்டு தனிநபர்கள் மனத்தால் இணைந்து இத்தனை துன்பங்களை தாங்கிக் கொள்ளமுடியும் என்றால், ஒரு நிமிடம் யோசியுங்கள் நீங்கள் உங்கள் மனத்தைக் கடவுளிடம் இணைத்து விட்டால் என்னதான் நடக்காது?//
அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். ராதா, மீரா, ஆண்டாள் போன்றோர் அப்படித்தான் கடவுளிடம் தங்களின் பிரேம பக்தியால் இணைந்துள்ளனர்.
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
காதல் கதை மிக அருமையாக உள்ளது நீங்கள் சொன்னமாதிரி இருமனங்கள் இணைந்தால் வாழ்வு நன்றாக பிரகாசிக்கும்
நீங்கள் கதையில் கூறியபடி அரசனின் அத்தனை கொடுமைகள் எல்லாம் தன் உடலுக்கு வலியே தெரியவில்லை என்றால் காதல் எவ்வளவு புனிதமானது விளக்கிய விதம் அருமை அம்மா,
காலத்துக்கு ஏற்ப பதிவிடப்பட்டுள்ளது 14-2-2013 அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன்!
நீக்குவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
வாங்கோ கோபு ஸார்!
பதிலளிநீக்குகதையை படித்து ரசித்ததற்கும், உங்கள் கருத்துக்களை மிக அழகாக பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!
//மனிதனின் வாழ்வில் காதல் என்னும் அன்பு இல்லை என்றால் அவனது வாழ்வு அர்த்தம் இல்லாதது; கிட்டத்தட்ட உயிரில்லாதவனைப் போன்றவன் அவன் என்று இதற்கு நாம் பொருள் கொள்ளவேண்டும். //
பதிலளிநீக்குஅருமை. மிகச் சிறப்பான கருத்து.
கதையும் அற்புதமாக இருக்கு.
//இரண்டு மனங்கள் இணைந்துவிட்டால் யாராலும், மரணத்தாலும் கூட அவற்றை பிரிக்க முடியாது.// அருமை.
ரசித்துப் படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ரமா!
நீக்கு// இந்தக் கதையில் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கேட்கிறீர்களா? நீங்கள் என்ன புரிந்து கொள்ளுகிறீர்களோ, அது உங்கள் பாடு.... நான் எஸ்கேப்! //
பதிலளிநீக்குபுரிந்தும் புரியமாலும் போன்ற பாவனை செய்ய முடிகிறது. நீங்களே சொல்லி விட்டீர்கள்
// மனம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்; உடல் அதன் வெளிப்பாடு; அவ்வளவு தான். இரண்டு மனங்கள் இணைந்துவிட்டால் யாராலும், மரணத்தாலும் கூட அவற்றை பிரிக்க முடியாது.//
காதலுக்காக இத்தனை கஷ்டமா என்று சிலர் நினைக்கலாம். இத்தனை கஷ்டப் பட்டாலும் காதலில் வெற்றி பெறுவது முக்கியம் என்று சிலருக்குத் தோன்றலாம், இல்லையா?
நீக்குஅதனால்தான் படிப்பவர்களுக்கே விட்டுவிட்டேன்!
வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!
மனம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்; உடல் அதன் வெளிப்பாடு; அவ்வளவு தான். இரண்டு மனங்கள் இணைந்துவிட்டால் யாராலும், மரணத்தாலும் கூட அவற்றை பிரிக்க முடியாது.
பதிலளிநீக்குஇரண்டு தனிநபர்கள் மனத்தால் இணைந்து இத்தனை துன்பங்களை தாங்கிக் கொள்ளமுடியும் என்றால், ஒரு நிமிடம் யோசியுங்கள் நீங்கள் உங்கள் மனத்தைக் கடவுளிடம் இணைத்து விட்டால் என்னதான் நடக்காது?//
இருமனம் ஒன்று பட்டால் பிரிவேது!
கடவுளின் நம்பிக்கையுடன் இருமனங்களும் சேர்ந்து வாழும் போது பிரிவேது.
கதை அருமை.
வாங்க கோமதி!
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
கதை மிக அருமையாக இருக்கிறது. ராமாயண அகல்யாவிற்கும் இந்த அகல்யாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்ன?
பதிலளிநீக்குஇக்காலக் காதலர்கள் படிக்க வேண்டிய பதிவு.
ராமாயணக் காதலை,கணவன் மனைவி புரிதலை , மிக மிக அழகாக ,பதிவு செய்துள்ளீர்கள்.
நன்றி பகிர்விற்கு.
ராஜி
வாங்கோ ராஜி!
பதிலளிநீக்குராமாயண அகல்யாவிற்கும் இந்தக் கதைக்கும் சம்மந்தமில்லை.
இந்தக் காலக் காதலர்கள் இடையே உங்கள் பதிவில் சொல்லியிருப்பது போல அலைபேசி தானே பேசுகிறது. இருவரும் சேர்ந்து இருக்கும் சமயங்களிலும் இருவர் கண்களும் அவரவர்கள் அலைபேசியின் மேலேயே!
நன்றி ராஜி!
அழகாய்ச் சொல்லி இருக்கிறீர்கள். காதல் என்பது என்னனு புரிஞ்சுக்காமல் வெறும் உடல் கவர்ச்சியைக் காதல்னு நினைப்பவர்கள் இதைப் படிக்க வேண்டும். நல்லதொரு பகிர்வு. நன்றி.
பதிலளிநீக்குவாருங்கள் கீதா!
நீக்குதாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். நிறைய பயணங்கள்.
வருகைக்கும், கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி!
தொடர
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஇரண்டு தனிநபர்கள் மனத்தால் இணைந்து இத்தனை துன்பங்களை தாங்கிக் கொள்ளமுடியும் என்றால், ஒரு நிமிடம் யோசியுங்கள் நீங்கள் உங்கள் மனத்தைக் கடவுளிடம் இணைத்து விட்டால் என்னதான் நடக்காது?//
அழகான அர்த்தமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
வாங்க இராஜராஜேஸ்வரி!
நீக்குவருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி!
உன்னதமான காதலை இந்நாட்களில் பார்ப்பது அரிதாகி விட்டது. எனக்குத் தெரிந்த ஒரு ஜோடியில் ஆணிடம் அந்த உணர்வைப் பார்க்கிறேன். காதலுக்கு தினமேது!
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம்!
நீக்குகாதலுக்கு தினமெது? - மிக அழகாச் சொல்லிவிட்டீர்கள்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
அன்புள்ள சகோதரி அவர்களுக்கு வணக்கம்! உங்களுடைய (திருவரங்கத்திலிருந்து என்ற) Blogger – இல் Layout பகுதிக்குச் சென்று Add a Gadget பகுதியில் FOLLOWERS என்ற Gadget - ஐ வைக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் என்னைப் போன்ற Google Bloggers தொடரவும், கருத்துரைகள் தரவும் வசதியாக இருக்கும். மேலும் அவர்களது பதிவுகள் உங்கள் Dash Board – இலும் தொடர்ந்து வெளியாகும்.
பதிலளிநீக்குgoogle+ followers gadget தான் வருகிறது. அதில் நீங்கள் என்னைத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.
நீக்குமுயற்சி செய்து பாருங்கள்.
இப்போது தான் ஒவ்வொன்றாக செய்து கொண்டு வருகிறேன். சில gadgets சுலபமாக இணைக்க வருகிறது. சில எப்படிச் செய்வது என்று புரியவில்லை.
இன்னும் கற்றுக் கொண்டே இருக்கிறேன்.
யோசனைக்கு நன்றி!
மனம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம்; உடல் அதன் வெளிப்பாடு; அவ்வளவு தான். இரண்டு மனங்கள் இணைந்துவிட்டால் யாராலும், மரணத்தாலும் கூட அவற்றை பிரிக்க முடியாது.
பதிலளிநீக்குஅருமையான காதல் கதையை வெகு சிறப்பாக சொன்னீங்க நன்றிம்மா.
வாங்க சசிகலா!
நீக்குகாதல் கதையை ரசித்ததற்கும், வருகைக்கும் நன்றி!
அன்பானவர்களின் உடன்பாடே காதல் ஆசிவதிப்போரின் பண்பாடே திருமணம் அன்பும் ஆசிர்வாதமும் இருந்தால் திருமணம் செய்ய வேண்டும்.உங்களின் கதையும் காதளைபற்றிய விளக்கமும் அருமை
பதிலளிநீக்குவாங்க கவியாழி!
நீக்குவருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி!
மனம் மிகக்
பதிலளிநீக்குகனம் பெரும்
தனம். புவனத்தையும் வெல்லலாம். நல்ல பதிவு.
பிந்திய காதலர் தின வாழ்த்து
வேதா. இலங்காதிலகம்.
வாங்க சகோதரி!
நீக்குஉங்களது காதலர் தின வாழ்த்துக்கு மிக மிகத் தாமதமாக பதில் எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும்.
வருகைக்கும் அழகான ஒரு கவிதைக்கும் நன்றி!
அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (19.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!
பதிலளிநீக்குஅன்புள்ள ஐயா!
பதிலளிநீக்குவணக்கம்.
முதலிலேயே சொல்லி சந்தோஷத்தை அதிகப்படுத்திய உங்களுக்கு என்ன கைம்மாறு செய்வது?
என் எழுத்துக்களின் மேல் இத்தனை நம்பிக்கை வைத்திருக்கும் உங்களுக்கு பல கோடி நன்றிகள்.
அன்புடன்,
ரஞ்சனி
வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2013/02/2.html
உங்களுடன் கூட அறிமுகம் என்பது தனிச்சிறப்பு!
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி!