சனி, 26 ஜனவரி, 2013

நமது தேசிய கீதம்






எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!
2011 ஆம் வருடம் டிசெம்பர் 27ஆம் தேதி நமது தேசிய கீதத்திற்கு 100 ஆண்டுகள் நிறைவடைந்தன. அதை கொண்டாடும் விதமாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில்  உள்ள மதனப்பள்ளி என்கிற ஊரில்   சுமார் ஒரு லட்சம் குழந்தைகள் நமது தேசிய கீதத்தைப் பாடினார்கள். பொது மக்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சி நடந்த  இடம் மதனப் பள்ளியில் உள்ள பெசன்ட் தியோசொபிகல் கல்லூரி வளாகம். இங்கு தான் சம்ஸ்க்ருதம் கலந்த பெங்காலி மொழியில் இந்தப் பாடலை திரு.தாகூர் எழுதினார். தியோசொபிகல் கல்லுரியின் அப்போதைய முதல்வரும் திரு. தாகூரின் நண்பருமான ஜேம்ஸ் ஹெச். கசின்ஸ் (James H. Cousins) என்பவரின் மனைவி திருமதி மார்கரெட் கசின்ஸ் (இவர் ஒரு மேற்கத்திய இசை வல்லுநர்) பல வித மெட்டுக்களை போட்டுக் காண்பித்து கடைசியில் தாகூர் மனத்தைக் கவர்ந்த மெட்டில் இருப்பது தான் நாம் எல்லோரும் இப்போது  பாடும் 'ஜன கண மனபாட்டு. 1911 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த மெட்டு போடப்பட்டது. 

1911 ஆம் ஆண்டு பிரம்ம சமாஜத்தின்  தத்வ போத பிரகாசிகை என்ற நூலில் திரு தாகூர் எழுதிய கவிதை தான் பிற்காலத்தில் நமது தேசிய கீதமாக மாறியது. முதல் முறையாக இந்தப் பாடல் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் 1911 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம்   27 ஆம் தேதி  பாடப்பட்டது.

1911 ஆம் வருடம் எழுதப் பட்டிருந்தாலும்இந்தப் பாடலின் ஹிந்தி மொழியாக்கம் பல ஆண்டுகள் கழித்து 1950 ஆம் வருடம் ஜனவரி 24 ஆம் தேதி இந்திய அரசியல் அமைப்பால் தேசிய கீதமாக தத்தெடுக்கப் பட்டது. 

இந்தப் பாடலை திரு தாகூர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த இடமும் இதே மதனப் பள்ளி தான். மதனப் பள்ளியில் இருக்கும் பெசன்ட் தியோசொபிகல் கல்லூரிக்கு  'தெற்கு சாந்தி நிகேதன்என்றே திரு தாகூர் பெயரிட்டார். இவர் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தன் கைப்பட எழுதிய  'ஜன கண மனபாடல் மதனப் பள்ளி தியோசொபிகல் கல்லூரி நூலகத்தில் கண்ணாடி சட்டத்திற்குள் பத்திரமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது. திரு. தாகூர் இந்த ஆங்கில மொழியாக்கப் பாடலுக்கு 'The Morning Song of India' என்று பெயரிட்டார். 

திரு. தாகூரால் எழுதப்பட்ட 5 பத்திகள் கொண்ட இந்தப் பாட்டின் முதல் பத்தி மட்டும் தேசிய கீதமாக இசைக்கப் படுகிறது. இதைப் பாடுவதற்கு 52 வினாடிகள் ஆகும். முழுவதும் பாடாமல் சுருக்கமாக முதல் அடியும்கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்பங்களில் பாடப் படுகிறது. சுதந்திர தினத்தன்றும்குடியரசு தினத்தன்றும் நம் நாட்டின் தலை நகரமான புது தில்லி செங்கோட்டையில் நமது தேசியக் கோடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப் படுகிறது. 

 பிரபலமானவற்றைச் சுற்றி சச்சரவு எப்போதும் இருக்கும்இல்லையாஅதுபோல திரு. தாகூர் எழுதிய இந்த தேசிய கீதமும் பல சமயங்களில் சச்சரவுக்கு ஆளாகி இருக்கிறது. 

இந்தப் பாடல் இயற்றப்பட்ட 1911 ஆம் ஆண்டு தான் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் முடிசூடிய ஆண்டு. 'பாக்கிய விதாதா', 'அதிநாயகஎன்ற சொற்கள் அரசரைப் புகழ்ந்து எழுதப் பட்டவைகடவுளின் புகழ் இல்லை என்று சிலர் அப்போதே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் இரண்டாம் நாளின் முக்கிய நிகழ்ச்சி அப்போது இந்தியா வந்திருந்த ஐந்தாம் ஜார்ஜ் அரசரை வரவேற்பதுதான். இந்த மாநாட்டைப் பற்றிய செய்தியை பத்திரிகைகள் வெளியிடும் போது "வங்கக் கவி திரு ரவீந்திர நாத் தாகூர் இங்கிலாந்து அரசரை வரவேற்பதற்காக தான் இயற்றிய பாடலைப் பாடினார்" என்று குறிப்பிட்டிருந்தன. 

ஆனால் திரு. தாகூர் அவர்கள் ஒரு சிறந்த தேச பக்தராகவே கருதப் பட்டார். 1919 இல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலைக்குப் பின்தனக்குக் ஆங்கிலேய அரசால் (யாரைப் புகழ்ந்து பாடினார் என்று குற்றம் சாட்டப் பட்டாரோ அந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரால்) கொடுக்கப் பட்ட 'சர்பட்டத்தையும் துறந்தார். இந்த சச்சரவுகளின் பின்னிலையில் திரு. தாகூர் 1937,1939 ஆம் ஆண்டுகளில் தான் எழுதிய கடிதங்களில் தாம் கடவுளையே ராஜா என்று குறிப்பிட்டதாகவும்தன்னை குறை சொல்பவர்களின் அறிவின்மை பற்றி வருத்தப் படுவதாகவும் கூறுகிறார். 

  'ஜன கண மனபாடலில் குறிப்பிடும் 'ராஜா', 'அரியணை', 'ரதம்போன்ற சொற்கள் பரம் பொருளான ஸ்ரீ கிருஷ்ணனைக் குறிப்பதாகவே திரு தாகூரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். 

இன்னொரு குற்றச்சாட்டு:
 'ஜன கண மனவில் குறிப்பிடும் இந்திய பிரதேசங்கள் எல்லாம் அப்போதைய ஆங்கில அரசின் கீழ் இருந்தவைமன்னர்களால் ஆளப்பட்டு வந்த மாநிலங்களைப் (காஷ்மீர்ராஜஸ்தான்ஆந்திராமைசூர்) பற்றி எதுவும் எழுதவில்லை. இந்தியாவைச் சுற்றியுள்ள இந்து மகா சமுத்திரம்அரபிக் கடல் பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எல்லைப் பிரதேசங்களைப் பாடியதால்ஒட்டு மொத்த இந்தியாவையுமே தன் பாட்டில் சேர்த்திருக்கிறார் திரு. தாகூர்; 'திராவிடஎன்பது தெற்குப் பகுதியையும், 'ஜொலதிதஎன்ற வார்த்தை கடல்மற்றும் சமுத்திரத்தைக் குறிக்கும் வடச் சொல் என்றும் பதில் அளிக்கிறார்கள் தாகூரின் ஆதரவாளர்கள்.

 சாதாரண இந்தியன் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு குடியரசு தினத்தன்று கிடைக்கும் இனிப்பை  பற்றி கனவு கண்டு கொண்டு இருக்கிறான்.




16 கருத்துகள்:

  1. இதில் 'திராவிட' வார்த்தையைப் பற்றியும் ஏதோ குழப்பம் உண்டு இல்லை?

    குடியரசு தின வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ஸ்ரீராம்!
      திராவிட என்று ஒட்டுமொத்த தென் இந்தியர்களையும், தென் இந்தியாவையும் குறிப்பிட்டிருப்பது சர்ச்சைக்குரிய விஷயமாயிற்று என்று நான் படித்த கட்டுரை கூறுகிறது. மேற்கொண்டு அதில் விவரம் இல்லை.

      உங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!
      நன்றி!

      நீக்கு
  2. தாகூர் எழுதிய நமது தேசியகீதமும் எல்லாவித விமர்சனங்களையும் தாண்டியே இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதை அழகாகச் சொன்னீர்கள்! குடியரசு தின வாழ்த்துக்கள்!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் இளங்கோ!
      நம் நாட்டில் எல்லாவற்றிலும் ஏதோ ஒரு சர்ச்சை!
      உங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!
      நன்றி!

      நீக்கு
  3. குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

    வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் இராஜராஜேஸ்வரி!
      உங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!
      நன்றி!

      நீக்கு
  4. பள்ளியில் ட்ரம்ஸ் அடித்து மாணவர்கள் பாடுவதே ஒரு அழகுதான். இவ்வளவு சர்ச்சைகள் இருப்பது இப்போதுதான் தெரிகிறது.

    "முதல் அடியும்,கடைசி அடியும் மட்டுமே சில சந்தர்பங்களில் பாடப் படுகிறது"_அப்படியா!

    உங்களுக்கும் இனிய குடியரசுதின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'ஜனகண மன அதி நாயக ஜெயஹே பாரத பாக்யவிதாதா!
      ஜயஹே, ஜயஹே, ஜய ஜய ஜய ஜயஹே!'

      என்று பாடி முடித்து விடுவார்கள்.

      உங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!
      நன்றி

      நீக்கு
  5. அருமையான அலசல் பதிவு.

    குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!

    வாழ்க பாரதம்! வெல்க பாரதம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கோபு ஸார்!

      உங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!

      நீக்கு
  6. நமது தேசிய கீதத்தைப் பற்றி பல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது தங்களின் பதிவிலிருந்து.
    மிக்க நன்றி ரஞ்சனி மேடம். குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் ரமா! வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      உங்களுக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துகள்!

      நீக்கு
  7. தேசிய கீதத்தைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் கோமதி!
      வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  8. தேசிய கீதம் பற்றி அருமையான தகவல்கள்......

    பகிர்வுகு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் வெங்கட்!
      படித்து ரசித்ததற்கும், கருத்துக்களை பரிமாறிக் கொண்டதற்கும் நன்றி!

      நீக்கு