சிறு வயதில் படித்த பழமொழி. தற்சமயம் எல்லோருடைய வீட்டிலும் அதிக இரத்த அழுத்தம் நோய் யாரேனும் ஒருவருக்காவது இருக்கிறது. அதனால் உப்பைக் குறைத்துகொள்ளும்படி மருத்துவர் கூறுகிறார். அதிக இரத்த அழுத்தத்தால் ஒருவர் படும் அவதி, அந்த வீட்டில் இருக்கும் எல்லோரையுமே பாதி உப்பு சாப்பிடும்படி செய்துவிடுகிறது. யாருக்கு என்ன ஆனாலும் சரி "என்னால் உப்பைக் குறைக்க முடியாதப்பா" என்று சொல்லுபவர்களும் இருக்கத்தான் இருக்கிறார்கள்.
அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பைக் குறைக்கவேண்டும் என்றால், சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு எத்தனை உப்பு தேவை?
உப்பில் அதிகப்படி இருப்பது சோடியம் குளோரைடு. உணவிற்கு ருசி கூட்டுவதுடன் நம் உடலுக்குத் தேவையான சோடியத்தையும் கொடுக்கிறது. உப்பு அதிகம் எடுத்துக் கொள்ளுவதால் அதிக இரத்த அழுத்தம், பக்க வாதம், உடம்பில் நீர் கோர்த்துக் கொள்ளுதல், சுண்ணாம்பு சத்துக் குறைவு முதலிய உபத்திரவங்கள் உண்டாகும்.
பல சமயம் உப்பு மற்றும் சோடியம் இரண்டும் மாறி மாறி ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. இது தவறு. உப்பு என்பது வேறு; சோடியம் என்பது வேறு. உப்பில் 40% சோடியம் 60% குளோரைடும் இருக்கிறது. உடம்பில் உள்ள நீரின் அளவு சமமாக இருக்கவும், தசைகள் சுருங்கி விரியவும் சோடியம் தேவை.
நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஆறு கிராம் உப்பு போதுமானது. அதாவது ஒரு டீஸ்பூன். இதற்கு குறைவாக உபயோகித்தாலும் நல்லதுதான். இதற்கு அதிகமான உப்பு எடுத்துக் கொள்ளுவது நாட்பட்ட நோய்களை உண்டாக்கும்.
நம்மூரில் சராசரியாக ஒருவர் 10 முதல் 12 கிராம் உப்பு ஒரு நாளைக்கு பயன்படுத்துகிறார். இது மிக மிக அதிகம் ஆகும். மெது மெதுவே உப்பைக் குறைப்பது நல்லது. ரொம்பக் கொஞ்சமாக உப்பு சாப்பிடுவதும் தவறு. உப்பு குறைந்தால் தசைப் பிடிப்பு ஏற்படும். மற்றும் electrolytes எனப்படும் மின் அயனிகளின் ஏற்றத் தாழ்வுக்கும் குறைவான உப்பு காரணமாகும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடும் போது மிகுந்த கவனம் தேவை. இவற்றில் பொட்டாஷியம் குறைவாகவும் சோடியம் அதிகமாகவும் இருக்கும். இதனால் இந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டால் அதிக இரத்த அழுத்த நோய் வர வாய்ப்பு இருக்கிறது. ஊறுகாய், உப்பு பிஸ்கட், வறுத்த உப்பு சேர்த்த முந்திரி, வெண்ணை, சீஸ், சாஸ், உருளைக் கிழங்கு சிப்ஸ் முதலியவற்றை மிதமாக உண்ணுங்கள். முடிந்தால் அறவே தவிர்த்து விடுவது நல்லது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மேல் உள்ள அட்டவணையில், எந்த அளவு உப்பு இருக்கிறது என்று பார்த்து பிறகு இவைகளை வாங்குங்கள். உணவிற்கு ருசி கூட்ட வெங்காயம், பூண்டு, கொத்துமல்லி, கறிவேப்பிலை முதலியவற்றை அதிகம் பயன்படுத்தி உப்பைக் குறைக்க முயற்சிக்கலாம். திடீரென்று உப்பைக் குறைப்பது கடினம்தான். ஆனால் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று வரும்போது, முயற்சி செய்வதில் தவறில்லையே?
உப்பு எப்படி நம் எடையை பாதிக்கிறது என்று பார்க்கலாமா?
உப்பு ஒரு கலோரி இல்லாத ஒரு பண்டம். "நாங்கள் சொல்லும் உணவை சாப்பிட்டால் ஒரே மாதத்தில் கொடி இடையைப் பெறலாம்" என்று விளம்பரம் செய்கிறார்களே, இவர்கள் உப்பு குறைவான அல்லாத உப்பே இல்லாத உணவையே சாப்பிடச்சொல்லுகிறார்கள். உப்பு குறைத்துச் சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் நீர் குறைகிறது எடையும் குறைகிறது. மறுபடியும் நீங்கள் உப்பு சேர்த்த உணவை சாப்பிடும்போது எடையும் கூடுகிறது. இது போன்ற 'diet' வேண்டவே வேண்டாம்.
நாமே தினசரி உப்பைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்:
- ஏற்கனவே சமைக்கப்பட்ட உணவில் அதிகப்படி உப்பு சேர்க்க வேண்டாம்.
- சிலர் தயிர் சாதத்திற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுவார்கள். சில வீடுகளில் சாதம் சமைக்கும்போது அதில் உப்பு சேர்க்கும் பழக்கம் இருக்கிறது. இவற்றைத் தவிர்க்கலாம்.
- தினமும் சப்பாத்தி சாப்பிடுபவரா நீங்கள்? சப்பாத்தி மாவில் உப்பு சேர்க்க வேண்டாம். அதற்கு தொட்டுக் கொள்ள செய்யப்படும் பொரியல், கூட்டு இவற்றில் இருக்கும் உப்பு போதுமானது.
- உப்பை குறைக்க மருத்துவர்கள் சொல்லும் வழி: சமைக்கும்போது சாம்பார், பொரியல் இவற்றில் உப்பு சேர்க்க வேண்டாம். ஒரு டீஸ்பூன் தலை தட்டி உப்பு எடுத்து வைத்துக் கொண்டு நீங்களாகவே சாம்பார், பொரியல் இவற்றை உங்கள் தட்டில் போட்டுக் கொண்டு அவற்றிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். இந்த அளவு உப்புதான் ஒரு நாள் முழுவதற்கும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளவும்!
கடைசியாக ஒன்று:
மாதத்திற்கு ஒரு நாள் உப்பில்லாமல் சாப்பிடலாம். கும்பகோணம் அருகில் ஒப்பிலியப்பன் என்கிற பெருமாள் கோவில் இருக்கிறது. அந்த சந்நிதியில் பெருமாளுக்கு தினமுமே உப்பு இல்லாமல் தான் தளிகை செய்கிறார்கள். பிரசாதம் எதிலும் உப்பு கிடையாது. நாச்சியாரை பெருமாள் திருக்கல்யாணம் செய்துகொண்ட போது நாச்சியார் மிகச் சிறிய வயதுடைய பெண்ணாக இருந்ததால் அவளது தந்தையார் "என் பெண்ணுக்கு உப்புப் போட்டு தளிகை செய்யத்தெரியாது" என்று பெருமாளிடம் சொல்ல, நாச்சியாருக்காக பெருமாள் "உப்பில்லாமல் சாப்பிடுகிறேன்" என்று சொன்னதாக வேடிக்கையாக ஒரு கதை வழக்கில் இருக்கிறது. அதனால் பெருமாளுக்கு "உப்பிலியப்பன்" என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது. பெருமாளே தினமும் உப்பு இல்லாமல் சாப்பிடும் போது நாம் அவரை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று உப்பில்லாமல் சாப்பிடலாம்.
உப்பிலியப்பன்" என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது. பெருமாளே தினமும் உப்பு இல்லாமல் சாப்பிடும் போது நாம் அவரை நினைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் திருவோண நட்சத்திரத்தன்று உப்பில்லாமல் சாப்பிடலாம்.//
பதிலளிநீக்குபெருமாள் சாப்பிடும் உப்பில்லா புளியோதரை அவ்வளவு ருசியாக இருக்கும்.
நான் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் வைத்திய நாதனை நினைத்து உப்பில்லாமல் சாப்பிடுகிறேன்.
எப்போதுமே தயிர் சாதத்திற்கு உப்பு போட்டுக் கொள்ள மாட்டேன்.
அருமையான பதிவு ரஞ்சனி.
வாங்க கோமதி!
நீக்குபெருமாள் அமுது செய்தபின் (சாப்பிட்டபின்) எல்லாமே ருசிதான்!
உப்பில்லாமல் இருப்பது இன்னொரு விதத்திலும் நல்லது. உப்பின் அருமை தெரியும்!
எப்படியோ உப்பைக் குறைத்தால் நல்லதுதான்.
பதிவுக்கு கூடுதல் தகவலுடன் நீங்கள் எழுதும் கருத்துரைக்கு நன்றி கோமதி!
ஆனால் ஒப்பிலியப்பன் கோவிலின் பிரசாதம் அவ்வளவு தித்திப்பாக இருக்கும்...
பதிலளிநீக்குவாங்க தனபாலன்!
நீக்குநீங்க ஒப்பிலியப்பன் கோவிலில் சக்கரைப் பொங்கல் சாப்பிட்டீங்களோ? எல்லாப் பிரசாதமும் கோவிலில் உள்ளே சாப்பிட்டால் உப்பு இல்லை என்பதே தெரியாது! அதுதான் பெருமாளின் மகிமை!
தயிர் சாதம்,சப்பாத்தி செய்யும்போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.உபயோகமான பதிவு.ஒப்பிலியப்பன் கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட நினைவு இருக்கிறது.
பதிலளிநீக்குவாங்க சித்ரா!
நீக்குபோன வாரம் அங்குதான் இருந்தோம்!
கோவில் பிரசாதம் சாப்பிடவில்லை. கல்யாணத்தில் உப்பும் உரைப்புமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்!
// பல சமயம் உப்பு மற்றும் சோடியம் இரண்டும் மாறி மாறி ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப் படுகிறது. இது தவறு. உப்பு என்பது வேறு; சோடியம் என்பது வேறு. //
பதிலளிநீக்கு//நாமே தினசரி உப்பைக் குறைப்பது எப்படி என்று பார்க்கலாம்://
நல்ல பயனுள்ள தகவல்கள். என்னையும் டாக்டர் உப்பை குறையுங்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். நாக்கு கேட்பதாக இல்லை. கட்டுப்படுத்த வேண்டும்.
வாங்க இளங்கோ ஐயா!
நீக்குயாராவது உப்பு போட்டு சாப்பிடுகிறாயா என்று கேட்டால் நான் 'இல்லையே' என்று சொல்லிவிடுவேன். எதிலெல்லாம் குறைக்க முடியுமோ குறைத்து விடுவேன்.
நீங்கள் முயற்சி செய்யுங்கள். உடல் நலம் மிகவும் முக்கியம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். தானாகவே உப்பு குறைந்துவிடும்.
பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குவாங்க இராஜராஜேஸ்வரி!
நீக்குவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி!
நான் தயிர் சாதத்திற்கு உப்பு சேர்ப்பதில்லை. சப்பாத்திக்கும் தவிர்க்கலாம் என்பது அருமையான டிப்ஸ். பயனுள்ள பகிர்விற்கு நன்றிம்மா!
பதிலளிநீக்குவாங்க கணேஷ்!
நீக்குசப்பாத்திக்கும் போட்டுக்காதீங்க. தொட்டுக்கொள்ள காரசாரமா சரிதாவை (!) பண்ணச் சொல்லுங்க!
பலருக்கும் பயனுள்ள பகிர்வு.
பதிலளிநீக்குவாங்க மாதேவி!
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
சாதாரணமாகவே சமையலில் அரை உப்புதான் எங்கள் வீட்டில். அதுவும் ர.கொ கொஞ்சம் மேலே போய், டி ஜி எல் 530 க்கு எகிறிய பிறகு ரொம்பவே குறைத்தாகி விட்டது!! ஏற்கெனவே அரை உப்பில் சாப்பிட்டதால் பெரிய பாதிப்பில்லை! இன்னொரு விஷயம்... எங்கள் திருமணம் நடந்தது ஒப்பிலியப்பன் கோவிலில்! ப்ளஸ் எங்கள் இரு மகன்களும் திருவோண நட்சத்திரம்.
பதிலளிநீக்குவாருங்கள் ஸ்ரீராம்!
பதிலளிநீக்குஓ!ஒப்பிலியப்பன் சேர்த்து வைத்த தம்பதியரா நீங்கள் இருவரும்? கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. போனவாரம் ஒரு கல்யாணத்திற்காகப் போயிருந்தபோது கோவிலில் ஆளரவமே இல்லை. நானும் பெருமாளும் தான்! அற்புதமான சேவை.
என் பிள்ளையும் திருவோண நட்சத்திரம் தான். எல்லா திருவோணத்தன்றும் உப்பில்லாமல் சாப்பிடுவேன் - அவன் பிறந்தநாள் அன்று மட்டும் பெருமாளின் ஸ்பெஷல் பர்மிஷனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளுவேன்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் டி ஜி எல் எதனுடைய அளவு என்று தெரியவில்லையே. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் ஸ்ரீராம்.அதுதான் உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரம்.
தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
\\உப்பில்லாத பண்டம் குப்பையிலே\\ உண்மையில் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் [பழங்கள், காய்கறிகள் முதலான] இயற்கையிலேயே நமக்குத் தேவையான அத்தனை உப்புக்களும் உள்ளன, தனியாக மேலும் உப்பு சேர்க்கத் தேவையே இல்லை. உப்பை மினரல் பாய்சன் எனவும், சர்க்கரையை ஸ்வீட் பாய்சன் எனவும் கூறுகிறார்கள். விஷத்தை உண்டால் எவ்வளவு பலசாலியாக இருந்தாலும் சாவது போல, இந்த விஷங்கள் நமது உடல் நலத்தை, ஆரோக்கியத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஒழித்துக் கட்டுகின்றன, எல்லா உறுப்புகளையும் தயவு தாட்சண்யமின்றி தாக்குகின்றன. இவை இரண்டையும் நீக்கினாலே/குறைத்துக் கொண்டாலே போதும், கொள்ளை வியாதிகளைத் தடுக்க முடியும். சர்க்கரை 100% நீக்கி விடலாம், [வெல்லம், தென், கருப்பட்டி பேரீச்சை போன்ற இனிப்புகளை வெளுத்துக் கட்டலாமே!!] உப்புக்குப் பதில் இந்துப்பைப் பயன்படுத்தலாம்.
பதிலளிநீக்கு# டவுட்டு.........!! NaCl என்ற மூலக்கூறுதானே உப்பு? ஒரு சோடியத்துக்கு ஒரு குளோரின் இருக்குமல்லவா? அப்படின்னா 50%-50%-தானே ரெண்டும் இருக்கணும், எப்படி 60%-40% ஆச்சு?
அன்பு ஜெயதேவ்,
நீக்குஉங்கள் விரிவான கருத்துரைக்கு நன்றி.
எனக்கும் அறிவியலுக்கும் நீண்ட தூரம். அதனால் நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் என்னிடம் இல்லை.
நீங்களே சொல்லிவிடுங்களேன்!
நானும் கெமிஸ்டிரியில் ரொம்ப வீக்கு மேடம், உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னுதான் கேட்டேன் மேடம்!! வேற யார்கிட்டவாச்சும் கேட்டு சொல்றேன் மேடம்!!! மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!
நீக்குமகளிர் தின வாழ்த்துக்கு நன்றி!
நீக்குசகோதரிக்கு “ உலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY ) – நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குஎனது வேர்ட்ப்ரஸ் தளத்தில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன்.
இணைப்பு இதோ:http://wp.me/p244Wx-sE
படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்!
உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
பதிலளிநீக்குஉப்பில்லாத பண்டம் குப்பையிலே!
உப்புச்சப்பில்லாம பேசுறான்!
உங்க வீட்டு உப்பத்தின்னுட்டு உங்களுக்கே துரோகம் பண்ணுவனா?
என உப்பு பழமொழி மற்றும் நம் அன்றாட பேச்சு வழக்கோடு கலந்த ஒன்று.
'உப்பிட்டவரை' என்ற நூலில் ஆ.சிவசுப்ரமணியன் அவர்கள் உப்பின் வேதியியல் பெயர் தொடங்கி உப்பளத்தொழிலாளர்களின் வாழ்க்கைவரை பலவற்றையும் விவரித்திருக்கிறார்.
உப்பை பயண்படுத்துவது குறித்த தங்கள் பதிவு அருமை.
நன்றி.
இங்கும் உங்களைப் பார்ப்பதில் சந்தோஷம் சித்திரவீதிக்காரரே!
நீக்குவருகைக்கும் உப்பு பற்றி பழமொழிகளுக்கும் நன்றி!