செவ்வாய், 27 நவம்பர், 2012

என்னுடைய இன்னமுதே....!


 இதுவும் திருக்கண்ணபுரம் பற்றிய பதிவு தான்.
‘நாங்கள் போனதில்லை’ என்று பின்னூட்டங்கள் வந்திருக்கின்றன. அதனால் இந்த இரண்டாவது பாகம்.
மாயவரம் என்னும் மயிலாடுதுறைக்குப் போய் அங்கிருந்து நாகபட்டினம் போகும் பேருந்தில் போகலாம்.
இன்னொரு வழி. திருவாரூரிலிருந்தும் வரலாம். உங்கள் பக்கம் அதிருஷ்டம் இருந்தால் திருக்கண்ணபுரம் உள்ளேயே வரும் பேருந்தும் கிடைக்கலாம் திருவாரூரிலிருந்து!
திருப்புகலூர் என்ற இடத்தில் இறங்க வேண்டும். இடது பக்கம் போனால் திருப்புகலூர். வலது பக்கம் திருக்கண்ணபுரம்.
எழுதிய அளவு அத்தனை சுலபமல்ல திருக்கண்ணபுரம் சென்று அடைவது.
பேருந்து செல்லும் முக்கிய பாதையிலிருந்து 3 அல்லது 4 கிலோமீட்டர் உள்ளே நடக்க வேண்டும். பேருந்திலிருந்து இறங்கியவுடன் உங்களை வரவேற்பது காவிரி ஆறு. நீரில்லாத ஆறு வருத்தத்தைக் கொடுக்கிறது. ஒரு காலத்தில் நிறைய நீர் ஓடியிருக்க வேண்டும். ஆற்றின் மேல் இருக்கும் பாலம் இதற்கு அத்தாட்சி!
‘எனக்கு கல்யாணம் ஆகி – அம்பது வருடம் முன்னால – திருக்கண்ணபுரம் வந்தேன். அப்போ ஆத்துல நிறைய தண்ணி. அப்போ பாலம் இருக்கல. மாட்டு வண்டில வந்து அந்தப் பக்கக் கரைல இறங்கினோம். மாடுங்க தண்ணிய பார்த்து மிரண்டுதுங்க. அப்பறம் எல்லோரும் இறங்கி சாமான் செட்டல்லாம் எடுத்துண்டு ஆத்த கடந்து வந்தோம்.’ என்று ஊருக்குள் நான் பார்த்த ஒரு பெண்மணி கூறினார்.
அவர் அப்போது பார்த்த திருக்கண்ணபுரம் ரொம்பவும் மாறவே இல்லை என்றே கூறலாம். பலர் ஊரை கிட்டத்தட்ட காலி பண்ணிக் கொண்டு பட்டணம் பார்க்கப் போய் விட்டார்கள். பல வீடுகள் விற்பனைக்குத் தயார்.
‘டீவி (கேபிள் தொடர்புடன்), ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், கிரைண்டர், மிக்ஸி, கெய்சர் எல்லாம் இருக்கு. கரண்ட்டு தான் இல்லை….’ சிரித்துக் கொண்டே நாங்கள் எப்போதும் தங்கும் வீட்டின் சொந்தக்காரர் திரு ரவியின் மனைவி திருமதி கீதா கூறினார்.
எப்படி இங்கு இருக்கிறார்கள் என்று தோன்றும்.
‘பெருமாள் இருக்கும்போது வேறென்ன வேண்டும்?’
யோசிக்க யோசிக்க இன்னும் நிறைய எழுத வேண்டும் போல இருக்கிறது.
மீண்டும் சந்திப்போம்… கணபுரத்தென் கருமணியை…..

7 கருத்துகள்:

  1. தொடருங்கள்... இன்னும் நிறைய தெரிந்து கொள்கிறோம் அம்மா... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. "பெருமாள் இருக்கிறார் வேறென்ன வேண்டும்?"

    அழகிய கோவிலைப் பார்க்கும்போது அவர்கள் சொல்வதின் அர்த்தம் புரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மைப் போல நகர வாசிகளுக்கு சற்று சிரமம் தான் ஸ்ரீராம்!
      வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

      நீக்கு
  3. தொடர்ந்து BLOGSPOT – இல் எழுதி வருவதற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. கோவிலுக்கு போவதற்கு வேண்டிய தகவல்களை தந்ததற்கு நன்றிம்மா.

    பதிலளிநீக்கு