சுமார் 30 வருடங்களுக்கு முன் ஒரு நல்லிரவில்
முதல் முறையாக திருக்கண்ணபுரம் சென்றோம். அங்கு யாரையும் எங்களுக்குத் தெரியாது –
தலைப்பில் சொன்னவரைத் தவிர!
கோவில் முன்னே மிகப் பெரிய குளம். குளத்தின் நீள
அகலத்தைவிட என்னைக் கவர்ந்தது குளம் நிறைய, காற்றினால் சிறுசிறு அலைகளுடன்
அலைபாய்ந்து கொண்டிருந்த நீர்!
‘வா, வா..... எத்தனை வருடமாகச் சொல்லிக்கொண்டே
இருந்தாய் – திருக்கண்ணபுரம் போகவேண்டுமென்று?’ என்று அழைப்பதுபோல இருந்தது.
சிலுசிலுவெனக் காற்று தண்ணீரின் வாசனையையும் சுமந்து வந்தது. எப்படி இத்தனை
தண்ணீர்?
‘கோவிலுக்குள் போலாமா? அப்புறம் மூடி
விடுவார்கள்.....’ கணவரின் குரல்.
கோவிலுக்குள் இன்னொரு ஆச்சரியம்: கருத்த திருமேனியுடன்
நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில். அறையில் சார்த்திய சிவந்த ஆடை....’அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்ற தாம் என் சிந்தனையே....’
என்ன ஒரு காம்பீர்யம்! முதல் பார்வையிலேயே மனம்
கொள்ளை போயிற்று.
மிகப்பெரிய கோவில். உள்ளே யாரும் இல்லை.
நாங்களும் பெருமாளும்தான்!
உற்சவர் செளரிராஜன். தன் அடியவரைக் காப்பாற்ற
கூந்தல் வளர்த்ததாக கதை. சௌரிகொண்டையுடன் பின்னழகும் நம்மைக் கவரும். ரொம்பவும்
புராதனத் திருமேனி. வலது திருக்கையில் ப்ரயோகச் சக்கரம்.
கோவில், கோவில் முன்பு பெரிய நித்ய புஷ்கரிணி.
நான்கு புறமும் மட விளாகம் என்னும் அக்ரஹாரம். அவ்வளவு தான் ஊர்!
முதல் தடவை சென்று வந்தபின் நிறைய தடவைகள் போய்
வந்தோம். இந்த வருடம் இரண்டு முறை போய் வந்தாயிற்று.
உற்சவத்தின் போது கொஞ்சம் வெளி ஆட்களைப்
பார்க்கலாம். பெருமாள் வருடத்திற்கு ஒரு முறை திருமலைராயன் பட்டினம் போய்
தீர்த்தவாரி கண்டருளுகிறார்.
ஒவ்வொரு முறை சென்று திரும்பும்போதும் மறுபடி வர
வேண்டும் என்றே தோன்றும்.
போனதடவை சென்றபோது எங்கள் நண்பர் சொன்னார்:
‘இங்க வந்துடுங்கோ, தினமும் கோவிலில் உட்கார்ந்து நாலாயிரம் சேவிக்கலாம் அவன் காது
குளிர... ஆனந்தமாகக் கேட்பான்.’
‘நம்மால இங்க வந்து இருக்க முடியாது. ஆஸ்பத்திரி
வசதியே கிடையாது.. ஏதாவது ஆச்சுன்னா...’
என் கணவர் ரொம்ப ப்ராக்டிகல்.
எங்கள் ஆடிட்டர் நண்பர் சொன்னார்: ‘ஏதாவது
ஆச்சுன்னா போய்ச்சேர வேண்டியதுதான். எதுக்கு ஆஸ்பத்திரி?’
போனதடவை திருக்கண்ணபுரம் போயிருந்தபோது ஒரு மாமா
மாமி வந்திருந்தார்கள். ‘ஒரு வருஷம் ஸ்ரீரங்கத்துல இருக்கப் போறோம். அத்தனை
உத்ஸவமும் சேவிக்க’ என்றார் மாமி.
எனக்குக் கூட ஆசைதான். இந்த முறை போயிருந்த போது
மறுபடி அதே மாமா, மாமி. ‘ஸ்ரீரங்கத்தில இருந்துட்டு, கும்மோணத்துலேயும் ஒரு வருஷம்
இருந்தாச்சு,’ என்ற மாமியைப் பார்த்து ரொம்பப் பொறாமையாக இருந்தது.
என்றைக்கு நான் இதைபோல கிளம்பப் போகிறேன்?
திருக்கண்ணபுரத்தில் கேட்ட திண்ணைப் பேச்சு:
ஸ்ரீரங்கத்தில் பிறக்கணும். திருக்கண்ணபுரத்தில்
பரமபதிக்கணும். ரொம்ப விசேஷம்.
யார் செய்த புண்ணியமோ, ஸ்ரீரங்கத்தில் பிறந்து
விட்டேன்.
‘சரணமாகும் தன தாளடைந்தார்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்’
//ஸ்ரீரங்கத்தில் பிறக்கணும். திருக்கண்ணபுரத்தில் பரமபதிக்கணும். ரொம்ப விசேஷம்.//
பதிலளிநீக்கு//யார் செய்த புண்ணியமோ, ஸ்ரீரங்கத்தில் பிறந்து விட்டேன்.//
நாங்கள் செய்த புண்ணியம் தான், இதையெல்லாம் தாங்கள் எழுதி நாங்கள் படிக்கக் கொடுத்து வைத்திருக்கிறோம்.
>>>>>>>>
பாராட்டுக்கு நன்றி. ஒரு முறை போய் சேவித்துவிட்டு வாருங்கள் வைகோ ஸார்!
நீக்கு//கோவிலுக்குள் இன்னொரு ஆச்சரியம்: கருத்த திருமேனியுடன் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில்.
பதிலளிநீக்குஅறையில் சார்த்திய சிவந்த ஆடை....’அரைச் சிவந்த ஆடையின் மேல் சென்ற தாம் என் சிந்தனையே....’
என்ன ஒரு காம்பீர்யம்! முதல் பார்வையிலேயே மனம் கொள்ளை போயிற்று.//
அழகான வர்ணனை. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
>>>>>>>>>>
//எங்கள் ஆடிட்டர் நண்பர் சொன்னார்: ‘ஏதாவது ஆச்சுன்னா போய்ச்சேர வேண்டியதுதான். எதுக்கு ஆஸ்பத்திரி?’//
பதிலளிநீக்குஅது சரி! சுலபமாகச் சொல்லிவிட்டார், அந்த ஆடிட்டர் நண்பர்.
இது என்ன கம்பெனி லாப நஷ்டக்கணக்கா, இதுபோல மிகச்சுலபமாகத் தீர்வு சொல்ல!
உயிர்ன்னா யாருக்குமே வெல்லமல்லவோ!
அந்த நீலமேகப்பெருமாள் அல்லவோ டாக்டர் ரூபத்திலே எல்லா ஆஸ்பத்தரிகளிலும் நிறைஞ்சு இருக்கிறார். இப்போதைக்கு நாம் ஆஸ்பத்தரிக்குப் போயே அவரை சரணடைவோம்.
யார் யாருக்கு என்ன என்ன எப்போ எப்போ நல்லது கெட்டது நடக்கணும்னு இருக்கோ! அந்தப் பெருமாளுக்கே வெளிச்சம்.
நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.
யார் யாருக்கு என்ன எனா எப்போ எப்போ நல்லது கெட்டது நடக்கணும்னு இருக்கோ....
நீக்குநிஜமான வரிகள்.
ஆனால் திருக்கண்ணபுரம் போனால் என் கணவருக்கு ஷுகர், பிபி எல்லாமே நார்மல் வந்துவிடும் இரவு நல்ல தூக்கமும் சேர்ந்து ரொம்ப உற்சாகமாகிவிடுவார்.
அப்படியே இதில் உள்ள பெருமாளையும் ஸேவிச்சுக்கோங்கோ:
பதிலளிநீக்குhttp://gopu1949.blogspot.in/2011/12/blog-post_28.html
தலைப்பு:
காவேரிக்கரை இருக்கு ..... !
கரைமேலே ________ இருக்கு!!
படத்தை பார்க்கும்போதே மனநிறைவைகொடுக்கிறது.உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..
பதிலளிநீக்குஇனிய அனுபவங்கள்... ரசிக்க வைத்தது...
பதிலளிநீக்குபடிக்க நாங்களும் கொடுத்து வைத்திருக்கிறோம்...
நன்றி அம்மா...
87la தான் கண்ணபுரப் பெருமாளைத் தரிசனம் செய்தோம். பட்டாச்சாரியார் நன்றாகத் தரிசனம் செய்துவைத்தார்.
பதிலளிநீக்குஇன்னும் அம்மாவோடும் தம்பி அவன் மனைவியோடு எடுத்த படத்தை பீரோவில் ஒட்டிவைத்திருக்கிறேன்.அந்தக் குளம் பின்னணியில். அருமையாக விவரித்திருக்கிறீகள்.சீர்காழியின் கண்ணபுரம் சென்றிருந்தேன் கேட்ட்டிருக்கிறீர்களா.
மிகவும் நன்றி. நல்ல நினைவுகள் நல்லதையே கொடுக்கும்.
சீர்காழியின் பாடல் கேட்டிருக்கிறேன், வல்லி. சீர்காழியின் 'கணகண' குரலில் நெஞ்சை அள்ளும்.
நீக்குஉங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
தாயார் கண்ணபுர நாயகி தானே. சென்றதில்லை. கேள்விப்பட்டிருக்கிறேன்.
பதிலளிநீக்குஎன் மகளும் ஸ்ரீரங்கத்தில் பிறந்தவள் தான்.
வாருங்கள் ஆதி.
நீக்குஆமாம், தாயார் கண்ணபுர நாயகி தான். பத்மினி தாயாரும் இருக்கிறாள். நாச்சிமார்கள் இரண்டு பேர். ஆண்டாள் சந்நிதியும் உண்டு.
பத்மினி தாயாரை தானம் கொள்ளும் நிலையில்தான் பெருமாளின் வலது கை இருக்கிறது.
ஸ்ரீரங்கத்தில் பிறந்த உங்கள் அருமைக் கண்மணிக்கு வாழ்த்துக்கள்.
வருகைக்கு நன்றி!
கண்ணபுரம் செல்வேன் கவலை எல்லாம் மறப்பேன் --
பதிலளிநீக்குஎன் கணவர் அடிக்கடி பாடும் பிடித்த பாட்டு !
கண்ணான பகிர்வுக்கு கருத்தான பாராட்டுக்கள்..
வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி!
நீக்குசீர்காழி தன் பாட்டால் இந்தப் பெருமாளையும், திருக்கண்ணபுரத்தையும் உலகுக்குக் காட்டியவர்.
பதிவும் கருத்தும் நன்றாக இருக்கின்றன.
பதிலளிநீக்குஒரு சிறிய திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும். பிரவுன் பேக்ரவுண்ட்டுக்குப் பதிலாக வெள்ளை பேக்ரவுண்ட் வைத்தால் எடுப்பாக இருக்கும். கடைசி இரண்டு வரி டார்க் புளூ கலரில் இருப்பது இந்த பேக்ரவுண்ட்டில் சரியாகத் தெரியவில்லை.
அடுத்து ஒரு சிறிய நுணுக்கம். பதிவின் அகலம் அதிகமாக இருக்குறது. கொஞ்சம் குறைத்தால் படிப்பதற்கு வசதியாக இருக்கும். முதல் வரியின் கடைசிக்குப் போய்விட்டு அடுத்த வரிக்கு வரும்போது வரி மாறி விடுகிறது.
இந்த இரண்டு கரெக்ஷனும் டெம்ப்ளேட்டில் அட்வான்ஸ் செட்டிங்க்ஸில் போய் செய்யவேணும். உங்களுக்குத் தெரிந்தவர் யாராவதை விட்டு செய்ய முடியுமானால் செய்யவும். நன்றி.
அன்புள்ள ஐயா, உங்கள் வருகைக்கும் யோசனைகளுக்கும் மிகுந்த நன்றி.
நீக்குஉங்கள் அறிவுரைப்படியே மாற்றி இருக்கிறேன், பாருங்கள்.
மீண்டும் நன்றியுடன்,
ரஞ்ஜனி
பதிவைப் படிக்கும்போது எனக்கும் ராஜராஜேஸ்வரி மேடம் போல சீர்காழி குரல் நினைவுக்கு வந்தது! இந்தக் கோவி(லும்)ல் பார்த்ததில்லை!
பதிலளிநீக்குவாங்கோ ஸ்ரீராம்!
நீக்குபக்கத்துப் பக்கத்தில் நிறைய கோவில்கள் திருக்கண்ணபுரம் அருகே.
ஒரு முறை போய் வாருங்கள்.
சீர்காழியின் பாடல் நானும் கேட்டிருக்கிறேன்.
நன்றி!
ஏற்கனவே Wordpress பதிவினில் இந்த திருக்கண்ணபுரம் பதிவினை படித்து கருத்துரையும் போட்டு விட்டோமே என்று இருந்து விட்டேன். Blogspot இலும் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! உங்கள் Wordpress பதிவினில் இப்போது சென்றால் எனக்கு Mozilla Firefox Cross Report என்று வருவதால் அந்த தளத்திற்கு செல்ல இயலவில்லை. அடுத்த பதிவினை Blogspot இல் எதிர்பார்க்கிறேன். நன்றி!
பதிலளிநீக்குஉங்களது ஆலோசனையின் படியே இங்கும் ஆரம்பித்து இருக்கிறேன். அங்கு போடுவதையே இங்கும் போடுகிறேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி திரு தமிழ் இளங்கோ!
வணக்கம் அம்மா நலம் நலமறிய ஆவல்.
பதிலளிநீக்குஅழகிய தங்கள் வர்ணனையில் தளம் சென்று வந்த நிறைவு எங்களிடம்.
வாருங்கள் சசிகலா. வணக்கம்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி!
வணக்கம்
பதிலளிநீக்குஅம்மா
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அம்மா நல்லா அனுபவித்து எழுதியுள்ளீர்கள் அம்மா உங்களின் எழுத்து எட்டுத்திக்கும் புகழ் பரவ என்றும் இறைவன் துணை இருக்கும் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பதிவிற்கு நன்றி.
பதிலளிநீக்குகண்ணபுரம் செல்வேன்
கவலையெல்லாம் மறப்பேன்
கண்ணனின் சன்னதியில்
எந்நேரமும் இருப்பேன்
என்று தன் வெண்கல குரலில்
பாடிய சீர்காழியின் குரல்
என்றும் காதில்
ஒலித்துக்கொண்டே இருக்கும்
அந்த பாடல் அந்தகோயில் அமைப்பு,
அதில் கோயில் கொண்டுள்ள கண்ணப்பனின்
வர்ணனைகளையும்
கொண்டுள்ளதால் கண்ணை மூடிக்கொண்டு
கேட்டால் அந்த காட்சி கண்முன் விரியும்
பக்தியுடையார்க்கு
கண்ணில் நீர் ததும்பும்
அங்குள்ள புஷ்கரணியில்
நீர் ததும்புவதைபோல.
உள்ளத்தில் அள்ளி வைப்பேன்
உவகையிலே திளைப்பேன்.
என்ற வரிகள் நமக்கு
உற்சாகத்தை கொடுக்கும்.
வாருங்கள் பட்டாபி ராமன்!
பதிலளிநீக்குமிகவும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் திருக்கண்ணபுரம் பற்றியும், சீர்காழி அவர்களின் பாடல் பற்றியும்.
போய் வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
எனது பதிவைப் படித்து ரசித்து கருத்துரை கொடுத்ததற்கு நன்றி!
பதிலுக்கு நன்றி
நீக்கு36 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பாடல் பிரசித்தம்.
உளுந்தூர்பேட்டை சண்முகம் அவர்கள்
இதுபோன்ற பல பாடல்களை இயற்றியுள்ளார்
அவைகளை அடிக்கடி வானொலியில் ஒலிபரப்புவார்கள்.
அடிக்கடி கேட்பேன்.
ஆனால் நான் இன்னும்
கண்ணபுரம் செல்லவில்லை.
என்ன காரணம் என்று தெரியவில்லை
நான் கோயில்களுக்கு செல்வதே அரிது.
ஆனால் இறைவன் என் மனதில் எப்போதும்
ஏதாவது ஒரு வடிவத்தில் சஞ்சரித்துகொண்டிருப்பான்.
இறைவனின் படங்களை வரையும்போது
அவன் நினைவிலே பல நாட்கள் இருப்பதால்
கோயிலுக்கு செல்லும் எண்ணம் எனக்கு ஏற்படுவதில்லை.
சமீபத்தில் நான் வரைந்த படங்கள் பலவற்றை
என்னுடைய(ramarasam) வலைப்பதிவில் போட்டிருக்கிறேன்
நீங்கள்பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
ஹைய்யோ!!! விட்டுப்போன எபிஸோடை இங்கே பிடிச்சேன்:-) ஏகாந்த ஸேவை பரமானந்தம்தான். ஜாலியா அவனோடு பேசலாம். யாரும் மறை கழண்ட கேஸ் என்று நினைக்க சான்ஸே இல்லையாக்கும்!
பதிலளிநீக்குஸ்ரீரங்கம் ஒரு வருசம் என்ற புலம்பல் இப்பதான் கொஞ்சம் குறைஞ்சு ஒரு மாசம் இருந்தாலும் போதுமுன்னு சொல்ல ஆரம்பிச்சுருக்கேன். கோபாலும் இப்படித்தான்..... ஆஸ்பத்திரி வேணும் என்பதில் குறியாக இருக்கார். அதென்னவோ.... அவுங்களுக்கு வருமானம் வேணுமேன்னு அப்படி ஒரு துடிப்பு. ஸீட்டுக்குக் கொடுத்த காசு வேறெப்படி கிடைக்கும் என்ற வாதம்:(
அடுத்த முறைன்னு ஒருபட்டியல் வளர்ந்துக்கிட்டே போகுது.....