‘ஸ்ரீராமா ஜெயஜெயா.....சீதே மனோஹரா ....
காருண்ய சாகரா கருணாநீ ஜெயஜெயா...’
விடியற்காலை 5 மணிக்கே (!) எழுந்து பிள்ளை மாட்டுப் பெண்ணை மணையில் உட்கார
வைத்துப் மேற்சொன்ன பாட்டைப் பாடி நலங்கு இட்டு.....தலைக்கு எண்ணெய் வைத்து...
முதலில் இந்தப் பாட்டை பாடி பிறகு இதன் தமிழ் பதிப்பை பாடுவது என் வழக்கம்.
மேலே சொன்ன பாட்டோட தமிழாக்கம் – சம்ஸ்க்ருத / தமிழறிஞர்கள் கோபிக்க வேண்டாம்.
முழுக்க முழுக்க வேடிக்கை!
சீராமா, மொ(மி)ளகாமா – சேர்த்தரைச்சா விழுதாமா
காய்ச்சினா ரசமாமா – கடுப்பு வலிக்கு இதமாமா!
ஒரிஜினல் பாட்டை பாடும் அதே ராகத்தில் இதைப்
பாடலாம்!
கங்கா (காவேரி) ஸ்நானம் செய்து புதுசு கட்டிண்டு பட்டாசு வெடிக்க கீழே போனோம்.
மாடி வீட்டு ஸ்ருதி நான் வருவதைப் பார்த்துவிட்டு, ‘பாட்டி, ஹேப்பி தீபாவளி’
என்றது. 3 வயதுக் குழந்தை. அதை அப்படியே கட்டிண்டு, ‘ஹேப்பி தீபாவளி’ என்றேன்.
ஸ்ருதியின் அண்ணா ராகுல் வாசலில் வெடி வெடிச்சுண்டு இருந்தான். ஸ்ருதி காதைப்
பொத்திண்டு, ‘எனக்கு வெடின்னா ரொம்ப பயம்’ ன்னு காதைப் பொத்திக்கொண்டு எங்கிட்ட
வந்து ஒட்டிண்டு நின்னுது.
குழந்தைகளை அணைப்பது என்பது எத்தனை பெரிய இன்பம்! நம் குழந்தையாகத் தான்
இருக்க வேண்டும் என்பதில்லை. ‘உன்னைத் தழுவிடிலோ... கண்ணம்மா..உன்மத்தம் ஆகுதடி!’
என் பிள்ளை என்னிடம் ‘நீ ஆட்டம்பாம் வைக்கிறயா?’ என்றான்.
‘சரி’ என்று எழுந்தேன்.
‘பாட்டி...! நீ வெடிப்பியா?’ என்றது ஸ்ருதி.
‘ம்ம்ம்ம்.......’ என்றபடியே வெடி வெடித்து விட்டு வந்தேன்.
‘நீங்க செம பாட்டி....!’ என்றான் ராகுல்.
கங்கா ஸ்நானம் ஆச்சு!
பதிவுலக வாசகர்களுக்கும், பதிவாளர்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
posted on 13.11.12
‘நீங்க செம பாட்டி....!’
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
நன்றி இராஜராஜேஸ்வரி!
பதிலளிநீக்குஇனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
முதல்லே பாடின பாட்டைத்தான் நானும் பாடுவேன். இப்படி தமாஷான பாட்டும் இருக்கென்று தெரியாமல்ப்போச்சே!!! இனி யாருக்கேனும் சொல்லிக்கொடுத்தா போச்சு. கங்காஸ்னானம் ஆச்சு.
பதிலளிநீக்குஏதாகிலும் ஒரு குழந்தை கொஞ்சுவதற்குக் கிடைத்தால்ப் போதும்
ஸ்ருதி கிடைத்தாளா? ராகம்,தானம்,பல்லவி அடுத்து கிடைக்கும்.
இங்கும் வந்துவிட்டேன் நான். ஸந்தோஷம்.
வாங்கோ வாங்கோ!
பதிலளிநீக்குஎங்கே வந்தாலும் சந்தோஷம் தான்!
அதிரசம் பண்ண முடியவில்லை. கூடிய சீக்கிரம் பண்ணி பார்க்கிறேன்.
எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி திரு தமிழ் இளங்கோ.
நீக்குநல்ல தமாஷ் பாட்டு. அர்த்தமும் இருக்கு.
பதிலளிநீக்குஅழகான தீபாவளி ரஞ்சனி,.
ஆட்டம் பாம் வெடிச்சிங்களா.
உடம்பெல்லாம் ககூசறதே பயத்தில்.:)
செம பாட்டிதான்!!
இன்னும் நிறைய வேடிச்சிருக்கலாம். பாவம் ஸ்ருதி, அவளுக்காக இத்துடன் நிறுத்துக் கொண்டேன்!
நீக்குநன்றி வல்லி.
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநான் பதில் சொல்லுவதற்குள் தீபாவளியே முடிஞ்சு போச்சு!
நீக்குநன்றி தனபாலன்!
Wish you & your family a very happy Diwali Ranjani madam!
பதிலளிநீக்குநன்றி மஹி!
நீக்குRanjani,
பதிலளிநீக்குநகைச்சுவையான உங்க தமிழாக்கப் பாட்டு சூப்பர்.அடுத்த தீபாவளிக்கு கங்கா ஸ்நானம் செய்யும்போது கண்டிப்பாக இந்தப்பாடலும்,நீங்களும் ஞாபகத்தில் வருவீங்க.உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
பாட்டை ரசிச்சீங்களா?
நீக்குநன்றி சித்ரா!
குதூகல குழந்தைகள் தின வாழ்த்துகள் ..
பதிலளிநீக்குநேற்று கணணி சரியில்லை. உங்களது தளத்தில் கருத்துரை இட்டேன்.
நீக்குமிகவும் அழகாக பதிவு போட்டிருந்தீர்கள்.
நன்றி இராஜராஜேஸ்வரி!
கங்கா ஸ்நானம் ஆச்சா? சந்தோஷம்.
பதிலளிநீக்குபோன தீபாவளிக்கு ஏதோ WORDPRESS ங்கற தூர தேசத்திலே இருந்தீங்க.
இந்த தீபாவளிக்காவது BLOGSPOT ங்கற நம்ம சொந்த ஊருக்கே நல்லவேளையா வந்துட்டேளே! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு.
>>>>>
போன வருடம் ப்ளாக் எழுதவே ஆரம்பிக்கவில்லை.
நீக்குடிசம்பர் வந்தால் ஒரு வருடம் ஆகிறது.
உங்களையெல்லாம் இப்போதுதான் சந்திக்க வேண்டும் என்று இருக்கிறது!
//சீராமா, மொ(மி)ளகாமா – சேர்த்தரைச்சா விழுதாமா
பதிலளிநீக்குகாய்ச்சினா ரசமாமா – கடுப்பு வலிக்கு இதமாமா!//
ஆஹா, பாட்டைக்கேட்டாலே கடுப்பு வலியெல்லாம் பறந்தோடி போயிடும் போல இருக்கே.
நம் தலையிலே எண்ணெயை நிறைய வைத்து கரகரன்னு பிறர் தேய்த்து விட்டால் ஏற்படும் சுகமே சுகமல்லவா! ;)))))
அதோடு இதுபோல ஒரு பாட்டும் என்றால் கேட்கவா வேண்டும்.
>>>>>>>>
என் பெரியம்மா தான் இந்தப் பாட்டை பாடுவாள். ஸ்ரீ ராமா மாதிரியே இழுத்து இழுத்து...ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்.
நீக்கு//‘நீங்க செம பாட்டி....!’ என்றான் ராகுல்.//
பதிலளிநீக்குசரியாகத்தான் சொல்லியிருக்கிறான்.
எழுத்துலகிலும் நீங்க செம பா[ர்]ட்டி யல்லவோ! ;)
>>>>>>>>
உங்களது 'pun' நன்றாக இருக்கிறது.
நீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபொங்கல் முடிந்த மறுநாள் கணுவுக்கு மஞ்சள் கீறிக்க என்று சிறுவயதினர் பெரிய வயதான மாமிகளிடம் வந்து போவார்கள்.
பதிலளிநீக்குஅப்போ ஒரு பாட்டுப்பாடியபடி அந்த சிறிய்வர்களின் நெற்றி வகிட்டினில் பசுமஞ்சளால் கீறிவிடுவார்கள், பெரிய பொம்மனாட்டிகள்.
அந்தப்பாட்டை என் அத்தங்கா [அத்தை பொண்ணு] பாடிக்கேட்கணும். எனக்கு பல அத்தைகளும் பல அத்தங்காக்களும் உண்டு. எனக்கு 20 வயது ஆகும் போதே அவர்கள் அனைவருக்கும் Above 50 வயது.
அதில் ஒரு அத்தங்காவை எங்கள் எல்லோருக்கும் ரொம்பவும் பிடிக்கும். ரொம்ப ஜாலி டைப். பக்கத்திலே யார் [ஆம்பளைங்க] இருக்காங்கன்னு கொஞ்சமும் கவலைப்படாம சரமாரியாக ஜோக் அடிப்பாங்க. எல்லோரும் கொல்லுன்னு சிரிப்பாங்க.
அந்த அத்தங்கா சொன்னதெல்லாம் அப்படியே நான் நொற்றுப்பண்ணி வைத்திருக்கிறேன். ஆனாலும் வெளியே எதையுமே என்னால் சொல்ல முடியாதவை. அவங்க இப்போது உயிருடன் இல்லை.
ஆனால், அவர்களையும் அவர்கள் சொன்னது எதையும் என்னால் இன்று மறக்க முடியவில்லை.
நல்லா குண்டாக, உயரமாக, பளிச்சென்ற முகத்துடன் தீர்க்கமாக முகம் முழுவதும் மஞ்சள் பூசி, பெரிய நெற்றியுடன், நெற்றி நிறைய மிகப்பெரிய குங்குமப்பொட்டுடன் இருப்பார்கள். தினமும் காவிரிக்கு நடந்தே போய் ஸ்நானம் செய்து விட்டு, துணிமணி துவைத்துவிட்டு, இரண்டு தோள்களிலும் துணிமணிகளை, பிழிந்தவாறு சுருட்டிப்போட்டுக்கிட்டு வருவாங்க. அவர்கள் எங்கள் ஆத்துக்கு வந்தாலே வீடே கலகலப்பாகிவிடும். நான் அவ்ர்கள் வந்ததும், ஓர் ஓரமாக தூங்குவது போல கண்ணை மூடிக்கொண்டு, காதைத்தீட்டி வைத்துக்கொண்டு, படுத்துக்கொள்வேன். அவர்கள் பேசும் போது கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக்கொள்வேன்.
>>>>>>>>>
உங்களை நான் படத்தில் பார்க்கும் போதெல்லாம், எனக்கு என் அந்த குறிப்பிட்ட அத்தங்கா அவர்களைப் பார்ப்பது போலவே நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குநான் மேற்கொண்டு ஏதாவது என் அத்தங்காவைப்பற்றியும், அவர்கள் சொல்லிச்சென்ற பொன்மொழிகள் பற்றியும், ஏதாவது உளறிவிடுவேனோ என எனக்கே ஓர் பயம் ஏற்பட்டு விட்டதால், இத்துடன் எஸ்கேப்.
நல்லதொரு பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பிரியமுள்ள
VGK
உங்கள் அத்தங்காவுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் : நான் குள்ளம்!
நீக்குஉங்கள் அத்தங்காவின் நினைவை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!