புதுவருடம் பிறந்துவிட்டது. எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
காலண்டர் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். ஓசியில் காலண்டர்கள் வாங்குவது ஒரு
பிடித்தமான பொழுதுபோக்காக சிலருக்கு இருக்கும். வீட்டில் மாட்டுகிறார்களோ இல்லையோ
வங்கி, துணிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் என்று பல இடங்களிலும் காலண்டர் கேட்டு
(அவர்களாகவே கொடுக்காத பட்சத்தில்!) வாங்குவது பெரிய இன்பமாக இருக்கும்
இவர்களுக்கு.
காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத்
தெரிந்து கொள்வோம்!
கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன்
உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால
நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக
அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு
புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று.
இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு.45 இல் ஜூலியஸ்
சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே. இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும்
காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர்.
பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின்
ஆனைப்படி, அலோயிஷியஸ்
ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத்
திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த
தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின்
பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முதன்முதலில் ஏற்றுக்கொண்டன.
1582 அக்டோபர் முதல்
இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு
பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப்
பட்டியலின் கடைசி நாடு.
மாதங்களின் பெயர்
வரலாறு:
ஜனவரி:
ரோமன் இதிகாசத்தில் “துவக்கங்களின் கடவுளாக” காணப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன்
காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.
பிப்ரவரி:
ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம்
பிப்ரவரியே “சுத்தப்படுத்தல்” எனும் பொருள்
தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி. புராதன ரோமர்கள்
பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா
எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.
மார்ச்:
ரோமர்களின் போர்க்கடவுளான “மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700 களில்
ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிப்ரவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை
மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.
ஏப்ரல்:
ஏபரல் மாதப் பெயர் பிறந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள்
உள்ளன. ‘திறக்குக’ எனும் பொருள்
தரும் ‘அபேரிரே’ எனும் இலத்தீன்
சொல்லிலிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து. ரோம
ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவங்குகிறது.
அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது கிரேக்கர்கள் வீனஸை
அஃப்ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே
ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மே:
கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
ஜூன்:
ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ’ஜூனோ’ என்பதிலிருந்தே
ஜூன் மாதம் பிறந்தது
ஜூலை:
ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன்
மொழியின் ‘கவிண்டிலஸ்’ என அழைக்கப்பட்ட
இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இம்மாதத்திற்கு ஜூலை எனப்
புதுப்பெயர் சூட்டப்பட்டது
ஆகஸ்ட்:
ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக் காலண்டரில் ஆறாவது மாதமாகக்
கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில்
இம்மாதத்தின் பெயராக ப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம்
நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை
வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
செப்டம்பர்:
இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘
எனப்பொருள் வரும்
“செப்டம்” என்ற சொல்லே
புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி
கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.
அக்டோபர்:
இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர்.
நவம்பர்:
ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.
டிசம்பர்:
இலத்தீன் மொழியில் ‘பத்து’ எனும் பொருள் தரும் “டிசம்பர்” ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது.
இந்திய தேசியக் காலண்டர்
கி.பி. 78 இல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக
கருதப்படுகிறது. சாலிவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில்
வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது . இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக
வருடக் காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது.
1957 இன் காலண்டர்
மறு சீரமைப்பு கமிட்டியே சக காலண்டரை அதிகாரப் பூர்வ காலண்டராக அங்கீகரிக்கப்
பரிந்துரை வழங்கியது. கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப்
பூர்வமாகத் துவங்கியது.
தமிழ்க் காலண்டர்:
சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப்
போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு
இஸ்லாமியக் காலண்டர்:
முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற
நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது
நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது
ஜூலியன் காலண்டர்
கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின்
அறிவுரைப் படி இக்காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ் சீசரே.
தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் கிரிகோரியன்
காலண்டரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே.
மிகவும் பயனுள்ள பதிவு சகோதரியாரே
பதிலளிநீக்குநன்றி
வாங்க ஜெயக்குமார் ஸார்!
நீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
காலண்டரின் கதை நன்றாக இருக்கிறது ரஞ்சனி.
பதிலளிநீக்குவாங்க கோமதி!
நீக்குவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
காலண்டர் கதை அருமை அம்மா... விளக்கத்திற்கு நன்றி...
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
வாங்க தனபாலன்!
நீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
இதுவரை அறியாத தகவல்
பதிலளிநீக்குபதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வாங்க ரமணி ஸார்!
நீக்குவருகைக்கும், கருத்துரைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!
காலண்டர் பற்றி இத்தனை செய்திகள் அடங்கியுள்ளதா? கடையில் காலேண்டர் கொடுக்க பொது வாங்கி ஆணியில் மாட்டுவதோடு சரி.அதைப் பற்றி யோசித்ததேயில்லை. இனி ஒவ்வொரு மாதமும் ஆரம்பிக்கும் போது பெயர்க்காரணம் பற்றி யோசிப்பேன். நினைவிற்கு வரவில்லையா ......இந்தப் பதிவிற்கு ஓடி வந்துவிடுவேன். அருமையான தகவல்களைத் தொகுத்து தந்ததற்கு மிக்க நன்றி ரஞ்சனி.
பதிலளிநீக்குவாங்க ராஜி!
நீக்குவருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!
தகவல்களுடன் பகிர்வு அருமை. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவாங்க ராமலக்ஷ்மி!
நீக்குவருகைக்கும், பத்தாண்டு வாழ்த்துக்களுக்கும் நன்றி!
காலண்டர் வரலாறு பதிவுக்கு நன்றிங்க. என் மகள் கிரேக்கம் பற்றி படித்தபோது படித்திருக்கிறேன். சில காலம் மயன் காலண்டர் ரொம்ப ஃபேமஸா இருந்துச்சு. அதை நினைத்து தூக்கம் வராமல் தவித்தவர்களும் (ஹி ஹி) உண்டு.
பதிலளிநீக்குஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வாங்க சித்ரா!
நீக்குமாயன் காலண்டர் பற்றி நாட்காட்டியின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறேன்.
வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!